காணிகளை விடுவிக்க- வீதியோரம் போராடும் மக்கள்!!

முல்­லைத்­தீ­வின் கேப்­பாப்­பு­லவு பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­னர் வச­மி­ருக்­கும் தமது பூர்­வீகக் காணி­களை விடு­விக்கக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் கேப்­பாப்­பு­லவு மக்­கள் ஆரம்­பித்த காணி மீட்புப் போராட்­டம், முன்­னேற்­றம் எது­வு­மற்ற நிலை­யில் 450 நாள்­களை தாண்­டி­யும் தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­லப்­ப­டு­கின்­றது.

இரவு, பகல் என்­றும் பாராது குளிர், வெயில் மற்­றும் நுளம்­புத் தொல்­லை­க­ளுக்கு மத்­தி­யி­லும், கேப்­பாப்­பு­லவு மக்­கள் தமது மாதிரிக் கிரா­மங்­க­ளுக்குச் செல்­லாது, சிறி­ய­தான ஒரு கூடாரத் துக்குள் இருந்துகொண்டு 450 நாள்­க­ளுக்­கும் மேலாக தாம் ஆண்­டாண்டு கால­மாக வாழ்ந்த தமது பூர்­வீக காணி­க­ளுக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

தமது காணி­க­ளில் உள்ள
பயிர்­க­ளின் பயனை ஈட்ட
முடி­யாத தமிழ்ப் பொதுமக்கள்
கேப்­பாப்­பு­லவு பகு­தி­யில் தற்­போது 104 குடும்­பங்­க­ளுக்குச் சொந்­த­மான 181 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­ப­டாத நிலை­யில் இரா­ணு­வத்­தி­னர் வச­முள்ள அதே­நே­ரம் , போருக்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­யில் இந்­தப் பூர்­வீகக் காணி­க­ளில் வசித்த மக்­கள் பலா மரம், தென்னை மரம் மற்­றும் பயிர்ச்­செய்­கை­கள் மூல­மாக தமது அன்­றாட வாழ்­வா­தா­ரத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்து கொண்­ட­னர். ஆனால் இன்று காணி­க­ளும் இல்­லா­மல், வீடு­க­ளும் இல்­லா­மல் வாழ்­வா­தார பயன்­க­ளும் இல்­லாத நிலை­யில் போராடி வரு­கின்­ற­னர்.

இந்த 181 ஏக்­கர் காணிக்­குள் மக்­க­ளுக்கு மிக­வும் அவ­சி­ய­மான இந்து ஆல­யம் ஒன்று, கிறிஸ்­தவ ஆல­யம் ஒன்று, பாட­சாலை ஒன்று, முன்­பள்ளி ஒன்று, பொதுக் கிண­று­கள் ஐந்து ஆகி­யவை காணப்­ப­டு­கின்­றன. இத்­தனை வசதிகள் இருக்கக்கூடிய காணி­களை இரா­ணு­வத்­தி­னர் தம்­வ­சம் வைத்­தி­ருப்­ப­தால், தமது பூர்­வீ­கக் காணி­க­ளில் மீண்­டும் குடி­யே­றி­வாழ விரும்­பும் இந்த மக்­க­ளின் எதிர்­கா­லம் கேள்­விக்­கு உள்­ளாக்­கப்­ப­டு­கி­றது.

கேப்­பாப்­பு­ல­வில் உள்ள காணி­களை விடு­விக்க அர­சாங்­கம் மீள்­கு­டி­யேற்­றம், புனர்­நிர்­மா­ணம் மற்­றும் இந்­து­மத அலு­வல்­கள் அமைச்­சி­னூ­டாக இரா­ணு­வத்­திற்கு 53 மில்­லி­யன் ரூபா­விற்­கும் மேற்­பட்ட நிதியை ஒதுக்­கிக்­கொ­டுத்­துள்­ளது. எனி­னும் இது­வரை கட்­டம் கட்­ட­மாக 425 ஏக்­கர் காணி­கள் மட்­டுமே விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­ன்றன. மீத­ முள்ள 181 ஏக்­கர் காணி­களை கடந்த ஒரு வரு­டக் கணக்­காக விடு­விக்­கா­மல் இரா­ணு­வம் ஏமாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றது.

தமது காணி­களுக்காக
தமிழ்­மக்­கள் போரா­டுகையில்
அவர்­க­ளது காணி­களை
மேலும் கைப்­பற்ற முய­லும் அரசு
இது இவ்­வாறு இருக்க, காணி­களை மீட்கப் போராட்­டம் நடந்து கொண்­டி­ருந்­த­போது 2017.08.04 திக­தி­யி­டப்­பட்ட அரச வர்த்­த­மானி ஊடா­க­வும், காணி அமைச்­சின் செய­லா­ள­ரின் 2017.07.21 திக­தி­யி­டப்­பட்ட கடி­தத்­திற்கு அமை­வா­க­வும், இரு தட­வை­கள் முல்­லைத்­தீவு, வட்­டு­வா­க­லில் கோத்­த­பாய கடற்­படை முகா­முக்­காக மக்­க­ளின் 670 ஏக்­கர் காணி­களை அள­வீடு செய்து சுவீ­க­ரித்து கொள்­ளும் முயற்சி இடம்­பெற்­றி­ருந்­தது. இருப்­பி­னும் மக்­கள் ஒன்­று­தி­ரண்டு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்த நிலை­யில் காணி அள­வீடு செய்­வது கைவி­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு காணி­க­ளுக்­காக அவற்­றின் உரி­மை­யா­ளர்களான தமிழ்­மக்­கள் போரா­டிக்­கொண்­டி­ருக்­கும் போது, மறு­மு­னை­யில் இரா­ணு­வத்­திற்­காக காணி சுவீ­க­ரிப்பை மேற்­கொள்­ளும் முயற்சி இடம்­பெ­றும் நிலை­யில். உள்­ளூ­ராட்சி தேர்­தல் பரப்­பு­ரைக்­காக யாழ்ப்­பா­ணத்­திற்கு பய­ணம் மேற்­கொண்ட அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, 80 சத­வீ­த­மான காணி­களை நாம் விடு­வித்­து­விட்­டோம் என்று காணி­கள் விடு­விக்­கப்­பட்ட வீதத்தை அதி­க­ரித்­துக் கூறி­யி­ருந்­தார். ஆனால் இன்­ன­மும் பெரும்­ப­கு­தி­யான காணி­கள் இரா­ணு­வத்­தி­ன­ரி­டமே இருக்­கின்­றன. 2009 மே 18 ஆம் திக­தி­யு­டன் போர் நிறை­வுற்று புலி­க­ளும் அழிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், வடக்கு மற்­றும் கிழக்­கில் மக்­க­ளின் பல ஏக்­கர் காணி­களை கைப்­பற்றி இரா­ணுவ முகாம்­களை அமைத்து நிலை­ கொள்­ள­வேண்­டிய அவ­சி­யம் என்ன என்ற கேள்வி தமிழ் மக்­கள் மத்­தி­யில் பர­வ­லாக எழுந்­தி­ருக்­கி­றது. இருந்­தும் இவற்­றுக்கு அர­சாங்­கம் பதில் தந்து முற்­றுப்­புள்ளி வைக்கத் தயா­ராக இல்லை.

முல்­லைத்­தீவு உள்­ளிட்ட தமி­ழர் பகு­தி­க­ளில் போருக்கு முன் னர் தமிழ் மக்­க­ளுக்கு சொந்­த­மாக இருந்த காணி­கள் இன்று இரா­ணு­வம் மற்­றும் வன­வள திணைக்­க­ளத்­திற்­கும் என அப­ரிக்­கப்­பட்டு சிங்­கள மக்­க­ளுக்கு சொந்­த­மாக்­கப்­ப­டும் தந்­திரச் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்­க­மும் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. இது தொடர்­பில் அண்­மை­யில் வட­மா­காண சபை உறுப்­பி­னர் ரவி­க­ரன் அவர்­க­ளி­னால் வட­மா­காண சபையின் 120ஆவது அமர்­வில் விரி­வாக சுட்டிக்­காட்­டப்­பட்­டிருந் தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தமது தலை­விதி குறித்து
நீதி கேட்­டுப் போரா­டும்
தமி­ழர்கள்
2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற அரச தலை­வ­ருக்­கான பொதுத்­தேர்­த­லில் மாற்­றத்தை எதிர்­பார்த்து மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு வாக்­க­ளித்த தமிழ் மக்­கள், இன்று தமது காணி­களை மீட்­டெ­டுக்க வரு­டக்­க­ணக்­கில் வீதி­க­ளில் போராட்­டங்­களை முன்­ன­டுத்து பகு­தி­ய­ள­வில் தமது காணி­களை பெற வேண்­டிய நிர்க்­க­தி­யான நிலைக்­குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­னர். இதே­போல் நல்­லாட்சி அர­சு­டன் கைகோர்த்­தி­ருக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளாக காணி விடு­விப்பு தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் ஆணித்­த­ர­மாக அழுத்­தம் கொடுக்­கும் வகை­யில் பேச­வும் இல்லை. பேச்சு நடத்­த­வும் இல்லை என்­பது தமிழ் இனத்­தின் சாபக்­கே­டா­கும்.

கேப்­பாப்­பு­லவு மக்­க­ளின் போராட்­டம் பல இன்­னல்­க­ளுக்கு மத்­தி­யில் 450 நாள்­க­ளுக்கு மேலாக தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது, இருவேறு சந்­தர்ப்­பங்­க­ளில் போராட்­டத்தை முன்­நின்று முன்­னெ­டுத்­துச் செல்­ப­வர்­கள் மீது பொலி­ஸார் முல்­லைத்­தீவு நீதி­மன்­றம் ஊடாக வழக்கு பதிவு செய்து போராட்­டத்­திற்கு தடை விதிக்­கு­மாறு கோரி­னர்.
எனி­னும் அதனை விசா­ரணை செய்த நீதி­மன்­றம் போராட்­டத்தை அமை­தி­யான முறை­யில் தொடர்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. இவ்­வாறு பல இன்­னல்­க­ளைத் தாண்டி வீதி­யில் இறங்­கிப் போரா­டிக் கொண்­டி­ருக்­கும் கேப்­பாப்­பு­லவு மக்­க­ளின் காணி­களை இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து விடு­வித்து மீள்­கு­டி­யேற்­றம் செய்து தமிழ்­மக்­க­ளது வாழ்­வில் விடிவை ஏற்­ப­டுத்த அர­சு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close