கார்த்தியின் அடுத்த படத்தில்- பழம்பெரும் நடிகையும் இணைவு!!

ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் படத்தில், கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்த்தி, ஜோதிகாவின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நிகிலா விமல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்குமுன் கிடாரி, வெற்றிவேல் படங்களில் நடித்துள்ளார்.

இவர்களுடன் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். செப்ரெம்பர் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

You might also like