கால்பந்தாட்டத்தில் – இரு அணிகளுக்குக் கிண்ணம்!!

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில், கால்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் பெரிய பண்டிவிரிச்சான் மரியகொறற்ரி விளையாட்டுக்கழக அணியும், பெண்கள் பிரிவில் தட்சன மருதமடு ஜக்கிய விளையாட்டுக்கழக அணியும் கிண்ணம் வென்றன.

பெரிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று இறுதியாட்டம் இடம் பெற்றது.

ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் பெரிய பண்டிவிரிச்சான் மரியகொறற்ரி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து தட்சனமருதமடு ஜக்கிய விளையாட்டுக்கழக அணி மோதியது.

இரண்டு அணியினரும் நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் ஏது வித கோல்களையும். பதிவு செய்யாது போக ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

சமநிலை தகர்ப்பு உதை மூலம் வெற்றி தீர்மானிக்ப்பட்டது. 8:7 என்ற கோல் கணக்கில் பெரிய பண்டிவிரிச்சான் மரியகொறற்ரி விளையாட்டுககழக அணி வெற்றி பெற்றது.

தொடர்த்து இடம் பெற்ற பெண்களுக்கான இறுதியாட்டத்தில் தட்சனமருதமடு ஜக்கிய விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சின்னப்பண்டிவிரிச்சான் சென்.சேவியர் விளையாட்டுக்கழக அணி மோதியது.

இரண்டு அணியினரும் நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் ஏது வித கோல்களையும். பதிவு செய்யாது போக ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

சமநிலை தகர்ப்பு உதை மூலம் வெற்றி தீர்மானிக்ப்பட்டது.

7:6 என்ற கோல் கணக்கில் தட்சனமருதமடு ஜக்கிய விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.

You might also like