side Add

கிணற்றில் வெடிக்காத வெடி பொருள்கள்- உரிமையாளர் அதிர்ச்சி!!

மன்னார்- முருங்கன், கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் கைவிடப்பட்டிருந்த காணியிலுள்ள கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமைகாணியைத் துப்பரவு செய்துள்ளார்.

அதன் போது அக்காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் வேளையில் வெடி பொருள் கள் காணப்படுவதை அவதானித்து, முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், கிணற்றுக்குள் அதிகமான வெடி பொருள்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து அவ்விடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இச்சம்பவத்தை கொண்டு சென்றனர்.

மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கிணற்றினுள் கிடந்த அனைத்து வெடி பொருள்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.

You might also like