side Add

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த சிறுமி!!

பதினொரு வயதுச் சிறுமி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் நேற்று மாலை நடந்துள்ளது.

பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த சிறுமி, தவறி வீழ்ந்துள்ளார்.

அன்னை சாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்பவரே உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர். தாயின் உழைப்பில் வாழ்கின்ற குடும்பத்தில் டிலானி மூத்த பிள்ளை.

இவரது இறுதி கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் குடும்ப வறுமை காணப்படுகிறது.

You might also like