கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி சம்பியன்!!

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி சம்பியனாகி சாதனை படைத்துள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து அணிகள் பங்குபற்றின.

இதில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணியானது மற்றைய நான்கு மாவட்ட அணிகளையும் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

இரண்டாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்ட அணியும், மூன்றாம் இடத்தை மன்னார் மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டது.

ஆண்கள் அணிக்கான போட்டியில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்ட அணியும், இரண்டாம் இடத்தை கிளிநொச்சி மாவட்ட அணியும். மூன்றாம் இடத்தை முல்லைத்தீவு மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டன.

You might also like