side Add

கிழக்கு மாகாணத்தில் முழுக்கடையடைப்பு!!

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு இன்று கடையடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.

அம்பாறை மாவட்டத்திலும் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களில் தனியார் வர்த்தக நிலையங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டு, வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் வழமையான செயற்பாடுகளும் மந்த நிலையில் காணப்பட்டது.

கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like