குருநாகல் வைத்தியசாலை எடுத்துள்ள தீர்மானம்!!

குருநாகல் போதனா வைத்தியசாலையில், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் தகவல்களைத் திரட்ட வைத்தியசாலை நிர்வாகப் பிரிவு தீர்மானித்துள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் 33,000 பேருக்கு சிசேரியன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைவாக சிசேரியன் சிகிச்சையின் பின்னர் தாய்மார் குழந்தை பாக்கியத்தை இழந்துள்ளனரா என்பது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த, மகப்பேற்று வைத்தியர் ஷாபியால் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக, குருநாகல் வைத்தியசாலையில் 1,000 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

You might also like