குழந்­தை­கள் மீது பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் – பாதி­ரி­யார்­க­ளின் கொடூ­ரச் செயல்!!

ஜேர்­ம­னி­யில் 1946ஆம் ஆண்­டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை உரோமன் கத்­தோ­லிக்­கப் பாதி­ரி­யார்­கள் பல­ரால், 3ஆயி­ரத்து 600க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கச் சமீ­பத்­தில் வெளி­யான ஓர் அறிக்கை தெரி­விக்­கி­றது.

இது தொடர்­பான ஆய்­வைக் கிறிஸ்­தவ திருக்­கோ­யில் ஒன்றே தொடங்­கி­யது. அதன்­படி, சுமார் ஆயி­ரத்து 670 பாதி­ரி­யார்­கள், 3ஆயி­ரத்து 677 குழந்­தை­க­ளைப் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு ஆளாக்­கி­யி­ருப்­ப­தாக அது கண்­ட­றிந்­தி­ருக்­கி­றது.

இது கண்­ட­னத்­துக்­கு­ரி­யது என்­றும், அவ­மா­ன­க­ர­மான செயல் என்­றும் குறித்த தேவா­ல­யத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறு­கின்­றார்.

You might also like