கூழுக்­கும் ஆசை மீசைக்­கும் ஆசை!!

தமி­ழில் கூழுக்­கும் ஆசை, மீசைக்­கும் ஆசை என்­றொரு பழ­மொழி உள்­ளது. கூழும் சாப்­பிட வேண்­டும். மீசை­யி­லும் அது ஒட்­டக் கூடாது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­தித் தலை­வ­ரும், அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாச நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றி­ய­தைப் பார்த்­தால் இந்­தப் பழ­மொ­ழி­தான் நினை­வுக்கு வரு­கின்­றது.

‘ஐக்­கிய இலங்­கையை உரு­வாக்­கு­வது என்ற கருத்­துக்­களை அனை­வ­ரும் பேசு­கின்­றோம். அதனை அர­ச­மைப்­பின் மூல­மாக மட்­டுமே உரு­வாக்க முடி­யாது. மக்­கள் மனங்­க­ளில் அதனை உரு­வாக்க வேண்­டும். தமிழ் மக்­கள் மனங்­க­ளி­லும் அதே நல்­லி­ணக்­கம் உரு­வாக வேண்­டும். அதனை உரு­வாக்க நாமும் முயற்­சிக்க வேண்­டும். அவர்­க­ளின் மனங்­களை வெற்­றி­கொள்ள வேண்­டும். இந்த நாடு ஐக்­கிய நாடாக இருக்­குமே தவிர கூட்­டாட்­சிக்கு (சமஷ்டி) இட­மில்லை’ என்று அவர் தனது அமைச்சு மீதான குழு­நிலை விவா­தத்­தில் உரை­யாற்­றி­யி­ருந்­தார்.

தமிழ் மக்­க­ளின் மனங்­களை சிங்­கள ஆட்­சி­யா­ளர்­கள் வெல்­ல­வில்லை என்ற உண்­மையை அவர் ஒப்­புக் கொண்­டி­ருக்­கின்­றார். 2009ஆம் ஆண்டு போர் முடிந்த பின்­னர் ஆட்­சி­யில் அமர்ந்த மகிந்­த­வாலோ அல்­லது தனது கட்சி தலை­மை­யில் 2015ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆட்சி மாற்­றத்­தின் ஊடாக அரி­யா­ச­ணத்­தில் அமர்ந்த நல்­லாட்­சி­யாலோ, தமிழ் மக்­க­ளின் மனங்­கள் வெல்­லப்­ப­ட­வில்லை என்ற உண்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

அந்த உண்­மையை அவர் உணர்ந்து கொண்­டா­லும், தமிழ் மக்­க­ளின் மனதை இன்­ன­மும் ஏன் வெற்றி கொள்ள முடி­யா­மல் இருக்­கின்­றது என்­பதை அவர் உண­ர­வில்லை.

தமிழ் மக்­க­ளின் மனங்­கள் வெல்­லப்­பட வேண்­டும். ஆனால் அதற்­காக சிங்­கள மக்­க­ளின் வாக்கு வங்­கியை இழக்­க­வும் கூடாது என்ற நிலைப்­பாட்­டி­லேயே அவர் இருக்­கின்­றார். சிங்­கள மக்­கள் மத்­தி­யில் கூட்­டாட்சி தொடர்­பில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தவ­றான விம்­பத்தை உடைப்­ப­தற்கு அவர் தயா­ரில்லை. ஏனைய சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளைப் போன்று, இந்த நாட்­டில் ஐக்­கிய இலங்­கைக்­குள் கூட்­டாட்­சிக்­கான பாதைக்கு இட­மில்லை என்று தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கள மக்­க­ளின் வாக்­கு­க­ளைச் சூறை­யா­டு­வதே இலக்கு என்று செயற்­ப­டும் அர­சி­யல்­வா­தி­க­ளால் ஒரு­போ­தும், தமிழ் மக்­க­ளின் மனங்­களை வெல்ல முடி­யாது. எந்­தக் காலத்­தி­லும் தமிழ் மக்­க­ளின் மனங்­களை அவர்­க­ளால் வெல்ல முடி­யாது.

தமிழ் மக்­களை நோக்கி மறப்­போம், மன்­னிப்­போம் என்று அறை­கூ­வல் விடுப்­பதை விடுத்து, சிங்­கள மக்­க­ளுக்கு உண்­மை­யச் சொல்­ல­வேண்­டும். இந்த நாடு எந்­தக் காலத்­தி­லும் பிள­வு­ப­டா­மல் இருப்­ப­தற்கு, தமிழ் மக்­க­ளுக்­கு­ரிய உரித்­துக்­களை, அவர்­கள் அனு­ப­விக்­க­வேண்­டிய உரி­மை­களை வழங்­க­வேண்­டும் என்ற உண்­மை­யைச் சொல்­ல­வேண்­டும். வாக்­கு­க­ளுக்­காக சிங்­க­ளத் தலை­வர்­கள், கூட்­டாட்சி என்­றால் பிரி­வினை என்று உரு­வாக்கி வைத்­துள்ள விம்­பத்தை உடைக்­க­வேண்­டும்.
இவை எதை­யுமே செய்­யா­மல், நாட்­டில் நல்­லி­ணக்­க­மும் வேண்­டும், தமிழ் மக்­க­ளின் மனங்­க­ளை­யும் வெல்­ல­வேண்­டும் என்­றால், அது வெறும் பகல் கன­வாக மாத்­தி­ரமே இருக்­கும்.

சிங்­கள அர­சி­யல் தலை­வர்­கள் எல்­லோ­ரும், தங்­கள் வாக்கு வங்­கி­யைப் பாதிக்­கா­த­வாறு உதட்­ட­ள­வில் நல்­லி­ணக்­கம் பேசு­ப­வர்­க­ளா­கவே இருக்­கின்­றார்­கள். அதற்கு சஜித் பிரே­ம­தா­ச­வும் விதி­வி­லக்­கில்லை என்­ப­தைத்­தான் அவ­ரது உரை சொல்­லா­மல் சொல்லி நிற்­கின்­றது.

நாட்­டின் அடுத்த தலை­மைத்­து­வத்­துக்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி சார்­பில் வரக்­கூ­டி­ய­வர் என்று கூறப்­ப­டு­கின்ற சஜித் பிரே­ம­தாச, தமிழ் மக்­க­ளின் மனங்­களை வெல்­வ­தற்கு வீடு­களை அமைத்­துக் கொடுத்­தால் மாத்­தி­ரம் போதாது. தமிழ் மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னையை, அந்­தப் பிரச்­சி­னை­யின் வேரைக் கண்­ட­றிந்து அதற்­குத் தீர்வு வழங்­க­வேண்­டும்.

You might also like