கேதார கௌரி விரதம்

சர்வ மங்­க­ளங்­க­ளை­யும் தரும் திருத்­தொண்டு

கேதார கௌரி விர­தம் சர்வ மங்­க­ளங்­க­ளை­யும் தரும் திருத்­தொண்டு. புரட்­டாதி மாதம் சுக்­கில பட்ச தசமி முதல் நாளில் ஆரம்­ப­மாகி ஐப்­பசி அமா­வாசை தினத்­து­டன் நிறைவு பெறும்.ஆரம்ப நாளன்று விர­தத்தை சங்­கற்­பித்து ஆரம்­பிப்­பது வழக்­க­மாகக் காணப்­ப­டு­கி­றது.

வழி­பாடு
தின­மும் வீட்­டில் பூசை வழி­பாடு செய்து மாலை வேளை­யில் விசே­ட­மாக ஆலய தரி ­ச­னம் காண்­பது விரத கால­வ­ழி­பாட்டு முறை­ யா­கும். இக்­கா­லத்­தில் ஸ்ரீ பஞ்­சா­க்ஷர மந்­திர ஜபம்,திரு­மு­றைப்­பா­ரா­ய­ணஞ் செய்­தல் வேண்­டும். நோயா­ளி­கள் விரத காலத்­தில் மதிய போச­னஞ் செய்து இரவு வேளை­யில் ஆலய தரி­ச­னம் கண்டு பின் பால், பழம் அருந்­த­லாம். ஏனை­ய­வர்­கள் மாலைப் பூசை வேளை­யின் பின் தானி­யம், பழம் அருந்தி விர­தத்தைக் கடைப்­பி­டிக்­க­லாம்.
முடி­வற்று உப­வா­சம் இருந்து பாறணை செய்­தும் தான தர்­மங்­களைச் செய்­தும் கேதார கௌரி விர­தத்தை மங்­க­ளக­ர­மாக இனிதே நிறைவு செய்து கொள்­ள­லாம்.
கேதார கௌரி விர­தத்தை ஆண், பெண் இரு­பா­லா­ரும் கடைப்­பி­டிக்­கின்­ற­னர்.குறிப்­பாக, மண­மா­கிய பெண்­கள் தங்­கள் மாங்­கல்­யம் தொடர்ந்­தும் மங்­க­ளமாக இருக்க வேண்­டி­யும், மண­மா­காத கன்­னிப் பெண்­கள் நல்ல மாங்­கல்ய வாழ்வை வேண்­டி­யும் இந்த விர­தத்தை கடைப்­பி­டிப்­பர். விர­தம் ஆரம்­ப­மான நாளி­லி­ருந்து இரு­பத்­தொரு இழை­க­ளைக் கொண்ட நூலில் நாள்­தோ­றும் ஒவ்­வொரு முடிச்­சு­க­ளாக இடப்­பட்டு, இறுதி நாளன்று அந்த நூலை அம்­பி­கை­யின் அரு­ளா­சி­யோடு ஆண்­கள் தமது வலது கையி­லும், பெண்­கள் தமது இட­து­கை­யி­லும் அணிந்து கொள்­வர்.

சிவ பக்­தி­யின் வெளிப்­பாடு
சக்­தி­ரூ­ப­மான பார்­வதி தேவி சிவனை நினைந்து விர­த­மி­ருந்து, வழி­பட்டு அதன் பல­னாக சிவப்­ப­ரம்­பொ­ரு­ளின் (இடது பக்­கம்) பாதி­யு­டம்­பைப் பெற்­றார் என்­பது வர­லாறு.சிவ­மும் சக்­தி­யும் இணைந்து அர்த்­த­நா­ரிஸ்­வ­ரி­யா­க­வும்,அர்த்த நாரீஸ்­வ­ர­ரா­க­வும் திருப்­பொ­லிவு கண்ட விர­தமே கேதார கௌரி விர­த­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. ‘கேதா­ரம்’ என்­பது இம­ய­ம­லைச் சார­லில் உள்ள ஒரு சிவ­த­லம். இந்­தத் தலத்­தில் எழுந்­த­ருளி இருக்­கும் சிவனை நினைந்து பார்­வதி தேவி­யா­கிய ‘கௌரி’ மனம், வாக்கு,மெய்­யால் ஒன்­றித்துத் திருத்­தொ ண்­டாற்­றி­ ய­தால் இப் பெயர் கூ­றல் உண்­டா­யிற்று. சிவ­னுக்­குச் சம­மான நிலை­யில் சக்தி அமை­யும் போது அந்­தத் திரு­வு­ரு­வம் பரா­சக்தி எனப் போற்­றப்­ப­டு­கின்­றது. தென்­நாட்­டுச் சைவம் எனப் போற்­றப்­ப­டும் சைவ சித்­தாந்­தம் கூறும் பரம்­பொ­ருள் சிவம். சிவ­னின் அருள் வேண்டி கடைப்­பி­டிக்­கப்­ப­டும் விர­தங்­கள் பல இருந்த போதி­லும், கேதார கௌரி விர­தம் பல­வ­கை­யி­லும் முதன்­மைச் சிறப்­பு­டைய திருத்­தொண்­டாக நோக்­கப்­ப­டு­கின்­றது. இதை­விட சர்­வ­லோக மாதா­வா­கிய பார்­வதி தேவியே இந்த நோன்பை முதன் முத­லில் கடைப்­பி­டித்­தார் என்­ப­தும், பரம்­பொ­ரு­ளின் கிரு­பை­யோடு இடப்­பா­கத்­தைப் பெற்று அவன் அரு­கா­கவே அமர்ந்து கொண்­டார் என்­ப­தும் இவ் விர­தத்துக்கு கொடுக்­கப்­ப­டும் தனிச்­சி­றப்­பா­கும்.

புராண வர­லாறு
கைல­யங்­கி­ரி­யின் சிக­ரத்­தில் நவ­ரத்­தி­னங்­க­ளால் இழைக்­கப்­பட்ட சிம்­மா­ச­னத்­தில் உமா­தேவி சமே­த­ராய் விளங்­கும் பர­ம­ சி­வன் பக்த கோடி­கள் தரி­சிக்­கும் பொருட்டு தேவ­ச­பை­யில் வீற்­றி­ருக்­கின்­றார். அங்கே தேவ­வாத்­தி­யங்­கள் முழங்க கிரு­தாசி, மேனகை முத­லிய தேவ­மா­தர்­கள் நாட்­டி­யம் செய்­கின்­ற­னர். அதிலே நடன ஸ்திரீ­க­ளில் சௌந்­தர்­யம் மிக்­க­வ­ளா­கிய அரம்­பை­யா­ன­வள் அற்­பு­த­மான நடன விசே­டங்­களை நடித்­துக்­காட்­டு­கி­றாள்.

பிருங்கி மக­ரி­ஷி­யின் விகட நாட்­டி­யம்
அப்­போது அந்­த­ரங்க பக்­த­ரா­கிய ‘பிருங்கி மக­ரிஷி’ பக்­தி­யோடு விசித்­தி­ர­மான விகட நாட்­டி­யம் ஒன்றை ஆடிக் காட்­டு­கி­றார். பார்­வ­தி­யும் அங்கே இருக்­கின்­றாள். தேவர்­கள் ஆனந்­தத்­தால் சிரித்து மகிழ்­கின்­ற­னர். பார்­வ­தக்­கு­கை­யெங்­கும் அந்­தச் சிரிப்­பொலி கல­க­ல­வென எதி­ரொ­லிக்­கின்­றது. பர­ம­சி­வ­னும் பிருங்­கி­யின் நாட்­டி­யத்­தில் மூழ்­கித் திளைத்து மகிழ்­கி­றார். பர­ம­சி­வன் அனுக்­கி­ர­க­மும் பிருங்கி மக­ரி­ஷிக்­குக் கிடைக்­கி­றது. அதைக் கண்டு சபை­யி­லுள்­ளோர் பிருங்கி மக­ரி­ஷியைக் கௌர­வித்துப் பாராட்­டு­கி­றார்­கள். இவ்­வேளை பிரம்மா, விஷ்ணு, தெய்­வேந்­தி­ரன் முத­லான முப்­பத்து முக்­கோடி தேவர்­க­ளும், அட்­ட­திக்­குப் பால­கர்­க­ளும், முனி­வர்­க­ளும், பதி­னெண்­ணா­யி­ரம் ரிஷி­கள் என்­போ­ரும் இரு­வ­ரை­யும் மூன்று தடவை பிர­தர்­ச­னம் செய்து வணங்­கிச் சென்­ற­னர்.

பிருங்கி மக­ரிஷி வண்­டின் உரு­வம் கொள்­ளல்
அந்த நேரத்­தில் பிருங்கி மக­ரிஷி வண்­டின் உரு­வம் பெற்று பர­மேஸ்­வ­ர­னுக்­கும், பார்­வதி தேவிக்­கும் இடை­யில் சென்று பர­மேஸ்­வ­ரனை மட்­டுமே 3 தட­வை­கள் வலம் வந்து பய­பக்­தி­யோடு வணங்­கி­னார். பிருங்கி ரிஷி­யின் செய்­கை­யைக் கண்டு கோப­முற்ற பார்­வ­தி­தேவி, பர­மேஸ்­வ­ர­னி­டம் கார­ணம் கேட்க பர­மேஸ்­வ­ர­னும் அர்த்­த­புஷ்­டி­யான ஒரு புன்­மு­று­வ­ லு­டன் பின்­வ­ரு­மாறு பதில் கூறி­னார். “தேவி…! பிருங்கி முனி­வர் உலக இன்­பத்தை நாடு­ப­வர் அல்ல. மாறாக மோட்­சத்தை நாடு­ப­வர். மோட்­சத்தை நாடும் அவர் உலக இன்­பங்­களை நல்­கும் உன்னை வணங்­காது மோட்­சத்தை நல்­கும் என்னை வணங்­கி­ய­தில் ஆச்­ச­ரி­யம் ஒன்­றும் இல்­லையே தேவி”– என்­றார்.

பார்­வ­தி­தே­வி­யின் சாபம்
இத­னைக் கேட்­டி­ருந்த லோக­மாதா பார்­வ­தி­தேவி, “எனது சக்தி இல்­லா­மல் மோட்­சத்தை நாடும் உங்­கள் பக்­தர் பிருங்கி முனி­வர் மோட்­சத்தை அடைய முடி­யாது. இங்­கி­ருந்து ஒரு அடி கூட எடுத்து வைத்து தனது இருப்­பி­டத்தை அண்ட முடி­யாது. அவ்­வா­றான சக்­தி­யைக் கொடுக்­கும் என்­னையே ஏள­னம் செய்­தாய்” எனக் கோப­முற்­றாள். ‘நிற்க முடி­யா­மல் போகக் கட­வாய்’ எனப் பிருங்கி முனி­வ­ருக்­குச் சாபம் கொடுத்­தார். நிற்க முடி­யாது சக்தி அனைத்­தை­யும் இழந்த முனி­வர் தள்­ளா­டி­ய­வாறே நிலத்­தில் சாய்ந்­தார். இந்­த­நி­லை­யில் “என் பக்­த­னைக் காப்­பாற்­று­தல் என் தர்­மம்” எனக் கூறிய சிவப் பரம்­பொ­ருள் பிருங்கி முனி­வ­ரின் கையில் தண்டு (ஊன்­று­ கோல்) ஒன்­றைக் கொடுத்து உத­வி­னார். ஊன்­று­கோ­லைப் பெற்­றுக் கொண்ட முனி­வர் சக்­தி­யைப் பெற்­ற­வ­ராக மீண்­டும் பர­மேஸ்­வ­ரனை மட்­டும் வணங்கித் தனது ஆச்­சி­ர­மத்தை அடைந்­தார்.
இதைக் கண்­ணுற்ற லோக­மா­தா­வுக்கு மேலும் கோபம் உண்­டா­கி­யது. பிருங்கி முனி­வர் மட்­டு­மன்றி தனது கண­வ­ரான பர­மேஸ்­வ­ர­னும் தன்னை அவ­ம­தித்து விட்­டாரே என்ற எண்ண மேலீடு கொண்­டார்.ஏனை­ய­வர்­கள் முன்பு என்னை அவ­ம­தித்த உங்­க­ளு­டன் இனி நான் வாழப் போவ­தில்லை எனக் கூறி­ய­படி கைலையை விட்டு நீங்­கி­னார். பூலோ­கத்­துக்கு வருகை தந்து வால்­மீகி மக­ரிஷி சஞ்­ச­ரிக்­கின்ற பூங்­கா­வ­னத்­தில் உள்ள ஓர் விருட்­சத்­தின் அடியில் அமர்ந்து கொண்­டார்.

பூலோ­கத்­தில் ஆதி பரா­சக்­தி­யின்
எழுந்­த­ரு­ளல்
ஆதி­ப­ரா­சக்­தி­யின் அம்­ச­மான பார்­வதி தேவி­யின் திருப்­பா­தங்­கள் அவ்­வ­னத்­தில் பட்­ட­தும் மரஞ் செடி, கொடி­கள் எல்­லா­மும் புத்­து­யிர் பெற்­றுத் தளிர்த்­தன. மல்­லிகை,முல்லை, மந்­தாரை, பாரி­ஜா­தம் போன்ற பூச் செடி­கள் பூத்­துக் குலுங்­கின.நறு­ம­ணம் வீசி வனத்­தின் நாற்­றி­சை­யை­யும் மகத்­து­வம் செய்­தன.இதனை அவ­தா­னித்துக் கொண்ட வால்­மீகி மக­ரிஷி தனது ஞானக் கண்­ணால் பார்­வதி தேவி தன்­னி­ருப்­பி­டம் வந்­தி­ருப்­பதை உணர்ந்து கொண்­டார்.ஆச்­சி­ர­மம் அமைந்­துள்ள வனத்­தில் பர­மேஸ்­வரி எழுந்­த­ருளி இருப்­ப­தைக் கண்­டார். பார்­வதி தேவி எழுந்­த­ரு­ளி­யுள்ள வில்­வ­ம­ரத்­த­டிக்கு வருகை தந்த முனி­வர், “தாங்­கள் பூலோ­கம் வந்து சிறி­யோ­னின் பன்ன­சாலை அமைந்­துள்ள வனத்­தில் எழுந்­த­ருளி இருப்­ப­தற்கு யான் என்ன தவம் செய்­தேனோ” எனக் கூறி­னார். அன்­னையை மெய்­சி­லிர்க்க வணங்­கி­னார்.பிருங்கி முனி­வ­ரின் அலட்­சி­யத்­தால் எம்­பெ­ரு­மா­னோடு கோப­முற்ற தேவி­யா­ன­வள் பூலோ­கம் வந்த கதையை அறிந்து கொண்­டார்.

ஆதி பரா­சக்தி அர்த்­த­நா­ரீஸ்­வர
மூர்த்­தம் பெறல்
இந்த சந்­தர்ப்­பத்­திலே பார்­வதி தேவி­யா­ன­வள் இறை­வனை மீண்­டும் அடைந்து ஆறு­தல் அடைய விரும்­பி­னாள்.விர­தம் என்­கிற அற்­பு­த­மான திருத்­தொண்டை மேற்­கொள்ள வால்­மீ­கி­யின் அறி­வு­ரை­யைக் கேட்­டாள்.அதற்கு வால்­மீகி,
“தாயே..! இவ்­வு­ல­கில் இது­வரை யாரும் கடைப்­பி­டிக்­காத விர­தம் ஒன்று உள்­ளது.அது ‘கேதார கௌரி விர­தம்’ எனச் சிறப்­பிக்­கப்­ப­டு­கின்­றது. அதை மெய்­யன்­பு­ட­னும் பய­பக்­தி­யு­ட­னும் கடைப்­பி­டித்­தால் விரத முடி­வில் பர­மேஸ்­வ­ர­னின் அருள் பூர­ண­மாகக் கிடைக்­கப் பெறு­வீர்­கள்” எனக் கூறி­னார். அதன்­ப­டியே 21 நாள்­கள் அம்­பிகை விர­த­மி­ருந்­தாள். விர­தத்­தில் மகிழ்ந்து 21 ஆவது நாள் அம்­பா­ளின் முன் தேவ கணங்­கள் புடை­சூழ ரிஷ­ப­ வா­க­னத்­தில் பூலோ­கத்­தில் அம்­பி­கை­யின் முன் காட்சி கொடுத்த எம்­பெ­ரு­மான் தனது இடது பாகத்தைக் கொடுத்து அர்த்­த­நா­ரீஸ்­வர மூர்த்­தம் பெற்றுக் கைலா­யம் சென்­றார்.

ஆகவே, நாமும் இத்­தகு அருட்­சி­றப்­புக்­களை உடைய விர­தத்தை நோற்றுப் பரம் பொரு­ளின் பூர­ணத்­து­வ­மான திரு­வ­ரு­ ளைப் பெற்று வையத்­துள் வாழ்­வாங்கு வாழ்­வோ­மாக.

You might also like