கைத்­தொ­ழில் கண்­காட்சி நாளை

வடக்கு மாகாண கைத்­தொ­ழில் கண்­காட்சி யாழ்ப்­பா­ணம் முற்­ற­வெ­ளி­யில் நாளை வியா­ழக் கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

மூன்று நாள்­கள் இடம் பெ­ற­வுள்ள இந்­தக் கண்­காட்­சியை தினமும் காலை 9 மணி தொடக்­கம் இரவு 7 மணி வரை பார்­வை­யிட முடி­யும் என்று ஏற்­பாட்­டுக் குழு தெரி­வித்­துள்­ளது. கைத்­தொ­ழில் மற்­றும் வணிக அமைச்சு, தேசிய கைத்­தொ­ழில் முயற்சி அபி­வி­ருத்தி அதி­கார சபை, யாழ்ப்­பா­ணம் வர்த்­தக தொழிற்­துறை மன்­ற­மும் இணைந்து இந்­தக் கண்­காட்­சியை ஏற்­பாடு செய்­துள்­ளன. வடக்கு மாகா­ணத்­தில் உள்ள உள்­ளூர் கைத்­தொ­ழில் முயற்­சி­யா­ளர் களை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் இந்­தக் கண்­காட்சி இடம்­பெ­ற­வுள்­ளது. துணி சார்ந்த வேலைப்­பா­டு­கள், பனை சார் உற்­பத்­திப் பொருள்­கள், உலர்ந்த கட­லு­ண­வு­கள், மா வகை­கள் மற்­றும் சிற்­றுண்டி உண­வு­கள் போன்­றன இந்­தக் கண்­காட்­சி­யில் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வும் விற்­பனை செய் யப்­ப­ட­வும் உள்­ளன என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் மேலும் அறி­வித்­த­னர்.

You might also like