கொக்குளாயில் 6 மீனவர்கள் கைது!!

முல்லைத்தீவு கொக்குளாய் கடலில் சட்ட விரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களை கடற்படையினர் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.

மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like