கொங்கோவில் எபோலா தாக்கம் அதிகரிப்பு!!

ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கியுள்ள நிலையில், அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பதை மருத்துவர்கள் உறிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், எபோலா வைரஸ் தாக்கி வருகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்ற மருத்துவ குழுவினருக்கு, ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக, அந்த நாட்டின் சுகாதார துறை அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார்.

You might also like