கொலைக்களமாகும்- மத்திய கிழக்கு !!

-பா.குமுதன்

பெண்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்­று­வ­ரும் வன்­மு­றை­கள் அவர்­க­ளின் மாண்­பும், சமத்­து­வ­மும் மதிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தன் வெளிப்­பாடே. தற்காலத்­தில் பெண்­கள் மீது திணிக்­கப்­ப­டும் குற்­றங்­க­ளின் அள­வு­க­ளும் அவற்­றின் தன்­மை­க­ளும் பல மடங்­கா­கப் பெரு­கி­யுள்­ளன. ஜன­நா­ய­கம் நில­வு­வ­தா­கச் சொல்­லப்­ப­டும் ஐரோப்­பிய, அமெ­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து, மதச் சடங்­கின் பெய­ரால் சிறு­மி­க­ளின் பிறப்­பு­றுப்பைச் சவர அல­கால் கிழித்­து­வி­டும் ஆபி­ரிக்க நாடு­கள் வரை அனைத்து இடங்­க­ளி­லும் பல்­வேறு வடி­வங்­க­ளில், பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­கள் நிகழ்ந்­து­கொண்­டு­தான் இருக்­கின்­றன. ஒவ்­வோர் இரண்டு நிமி­டங்­க­ளுக்கு ஒருதடவை பன்­னாட்­ட­ ள­வில் ஒரு பெண் வன்­மு­றைக்­குள்­ளாக்­க­ப­டு­வ­தா­கத் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன. ஒரு நாட்­டின் வளர்ச்­சிக்­கும் ஒவ்­வொரு குடும்­பங்­க­ ளின் மீட்­சிக்­கும் ஆணி­வே­ரா­கத் திகழ்­கின்ற பெண்­கள் இன்று பல்­வேறு ஒடுக்­கு­மு­றை­க­ளுக்­கும், பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கும் ஆளா­கி­வ­ரு­வதை உண­ர­மு­டி­கின்­றது. இலங்­கை­போன்ற வளர்­மு­க­நா­டு­க­ளில் அதன்­தாக்­கம் மலிந்­துள்­ளது.

பரி­தா­பப் பணிப் பெண்­கள்
குறிப்­பாக வெளி­நா­டு­க­ளுக்­குப் பணிப்­பெண்­க­ளா­கச் செல்­ப­வர்­க­ளின் நிலையோ பரி­தா­பம். உள்­நாட்­டில் குடும்­ப­ வன்­மு­றைக்­கும், சமூ­கத்­தின் ஒடுக்­கு­மு­றைக்­கும் உள்­ளாகி நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யுள்ள பெண்­கள் தமது வாழ்­வின் மீட்­சிக்­கா­க­வும், பொரு­ளா­தார வளத்­துக்­கா­க­வும், வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­க­ளாகத் தம்மை உரு­மாற்­றிக் கொள்­கின்­றார்­கள். எந்­த­வித கல்­வித் தக­மையோ அல்­லது தொழில்­சார் தேர்ச்­சியோ வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு­க­ளுக்கு அவ­சி­ய­மின்­மை­யால் குடும்­பப் பெண்­கள் முதல் இளம்­பெண்­கள் வரை அனை­வ­ரும் இன்று வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­க­ளா­கச் செல்­வது சாதா­ரண விட­ய­மா­கி­விட்­டது. இலங்­கை­யில் இருந்து மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­குப் பணிப்­பெண்­க­ளா­கச் சென்ற பெண்­க­ளின் எண்­ணிக்கை கடந்­த­வ­ரு­டம் 16 சத­வீ­தத்­தால் அதி­க­ரித்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதன் எண்­ணிக்கை 64 ஆயி­ரத்து 965 ஆக உள்­ளது. மத்­திய கிழக்­கி­லுள்ள இஸ்­லா­மிய நாடு­க­ளுக்­குச் செல்­லும் இலங்­கை­யைச் சேர்ந்த பணிப்­பெண்­கள் பல்­வேறு உடல், உள துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு ஆளாகி மீண்டு வரும் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. மட்­டு­மன்­றி அதில் பலர் சட­லங்­காக நாடு திரும்­பு­கின்ற அவ­லங்­க­ளும் தொடர்­கின்­றன.

போலி முக­வர்­கள்
மத்­திய கிழக்கு நாடு­க­ளைப் பொறுத்­த­வரை ஏனைய நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது அவற்­றின் சட்­ட­திட்­டங்­கள் வேறு­பா­டு­க­ளைக் கொண்­ட­வை. அவை­தொ­டர்­பாக இங்­கி­ருந்து செல்­லும் பணிப்­பெண்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­தப்­ப­டாத நிலை இருக்­கி­றது. தங்­களை முக­வர்­க ­ளா­கக் காட்­டிக்­கொள்­ளும் சில சட்­ட­வி­ரோ­த­மான நபர்­க­ளின் பொய் வார்த்தை­களை நம்­பித் தமது வாழ்­வையே இழக்­கும் அவல நிலைக்கு இதற்கு முகம்­கொ­டுக்­கும் பெண்­கள் தள்­ளப்­ப­டு­கின்­ற­னர். வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புப் பணி­ய­கத்­தால் பல விழிப்­பு­ணர்வு நடை­மு­றை­கள் பின்­பற்­ற­பட்டு வந்­தா­லும் போலி முக­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும், செயற் திற­னும் வேக­மெ­டுத்­துள்­ளன. தமது கஸ்­ரத்­தைப் போக்­கி­கொள்­வ­தற்­கா­கச் சட்ட திட்­டங்­க­ளை­யும், நடை­மு­றை­க­ளை­யும் அறி­யாத பல­பெண்­கள் இவ்­வா­றான முக­வர்­க­ளி­டம் ஏமாற்­ற­ம­டை­கின்ற அவ­லங்­கள் நீள்­கின்­றன. ஒரு தொழி­லைப் பெற்­றுக்­கொ­டுப்­பது மாத்­தி­ரமே தமது கடமை என முக­வர்­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். அதன் பின்­னர் வரு­கின்ற பிரச்­சி­னை­கள், துன்­பு­ றுத்­தல்­கள் தொடர்­பாக அவர்­க­ளுக்கு எவ்­வித கரி­ச­னை­யும் இல்லை. 18 வய­தைப் பூர்த்தி செய்­யாத தாயா­கிய பெண்­க­ளைப் போலி­யாக ஆவ­ணங்­ளைத் தயா­ரித்து வெளி­நாட்­டுக்கு அனுப்­பு­வ­தால் பணிக்­குச் செல்­லும் அவர்­கள் மாத்­தி­ர­மில்­லாது இங்கு அவர்­க­ளைச் சார்ந்து வாழ்­ப­வர்­க­ளும் பல்­வேறு பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­வ­ரு­கின்­ற­னர். இலங்­கை­யில் பாலி­யல் வதை­க­ளுக்கு உள்­ளா­கும் சிறு­மி­க­ளின் குடும்­பப் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் அவர்­க­ளது தாய் வெளி­நாட்­டுக்­குப் பணிப்­பெண்­ணா­கச் சென்­றி­ருக்­கின்­ற விட­யம் இழை­யோ­டி­யி­ருக்­கும். இதே­வேளை பாதிப்­புக்­குள்­ளா­கும் பல பெண்­கள் தமது சமூக மதிப்­புக் கருதித் தமக்கு நிகழ்ந்­த­வற்றை வெளிப்­ப­டுத்­தாத நிலை­யும் இருக்­கி­றது.

சட­ல­மா­கத் திரும்­பிய வவு­னி­யாப் பெண்
வவு­னி­யா­ந­க­ரின் வடக்கே அமைந்­துள்­ளது அண்­ணா­ந­கர் கிரா­மம். சாதா­ரண கூலித்­தொ­ழி­லா­ளி­க­ளைக் கொண்ட குறித்த கிரா­மத்­தில் தனது ஐந்து பிள்­ளை­க­ளு­டன் கண­வனை இழந்த நிலை­யில் வசித்து வந்­தார் 54 வய­தான குமா­ர­வேல் அன்­னக்­கிளி. வறுமை வாட்­டி­யெ­டுத்­த­தால், தனது பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லத்­துக்­கா­கச் சவூ­தியை நோக்­கிக் காலடி எடுத்­து­வைத்­தார். பல வரு­டங்­கள் மத்­திய கிழக்கு நாடு­க­ளில் பணிப் பெண்­ணா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வம் அவ­ருக்கு இருந்­துள்­ளது. அந்த நம்­பிக்­கை­யில் கடந்த வரு­ட­மும் தனது குடும்­பச் சுமைக்­கா­கப் பல்­வேறு எதிர்­பார்ப்­புக்­க­ளு­டன் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முக­வர் ஒரு­வர் ஊடாக மத்­திய கிழக்கு நாடான சவூதி அரே­பி­யா­வுக்­குப் பணிப் பெண்­ணா­கச் சென்­றுள்­ளார். சென்ற முதல் நான்கு மாதங்­க­ளும் இலங்­கை­யில் இருக்­கும் அவ­ரது குடும்­பத்­தி­ ன­ரு­டன் தொலை­பேசி மூலம் பேசி­வந்­துள்­ளார். எனி­னும் கடந்த வரு­டம் ஓகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து டிசெம்­பர் மாதம் வரை­யும் உள்ள நான்கு மாத காலப்­ப­கு­தி­யில் உற­வி­னர்­க­ளு­ட­ன் எவ்­வித தொடர்­பு­க­ளை­யும் அவர் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. தொடர்­பி­லி­ருந்த முதல் நான்கு மாத காலப் பகு­தி­யில் தான் பணி­யாற்­றும் வீட்­டில் தனக்­குச் சித்­தி­ர­வதை இடம்­பெ­று­வ­தா­கத் தனது குடும்­பத்­தி­ன­ருக்­கும், அவரை வெளி­நாட்­டுக்கு அனுப்­பிய முக­வ­ருக்­கும் தெரி­யப்­ப­டுத்தி வந்­துள்­ளார். தன்னை அங்­கி­ருந்து வேறு இடம் ஒன்­றில் வேலைக்கு அமர்த்­து­மா­றும் அல்­லது தன்னை நாட்­டுக்கு அழைத்­துக்­கொள்­ளு­மா­றும் தெரி­வித்து வந்­துள்­ளார். இந்த வி­ட­யம் தொடர்­பாக எவ­ரும் கரி­சனை கொள்­ள­வில்லை.

செய்தி கேட்டு அதிர்ச்­சி­ய­டைந்த குடும்­பத்­தி­னர்
அந்­தப் பெண் கடந்த வரு­டம் ஓகஸ்ட் மாதம் தவ­றான முடிவை எடுத்து உயிரை மாய்த்­துக் கொண்­ட­தா­கக் கூறி நான்கு மாதங்­க­ளின் பின்­னர் சவூ­தி­யி­லி­ருக்­கின்ற அவ­ரது உற­வி­னர் ஒரு­வர் ஊடாக வவு­னி­யா­வி­லி­ருக்­கும் அவ­ரது உற­வி­னர்­க­ளுக்­குத் தக­வல் வழங்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பெண் சவூ­தி­யில் சாவ­டைந்து நான்கு மாதங்­க­ளும் 18நாள்­க­ளும் கடந்­துள்­ளன. அவ­ரது சட­லம் சவூ­தி­அ­ரே­பி­யா­வின் மருத்­து­வ­மனை ஒன்­றில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­யாப்­புப் பணி­ய­கத்­தால் உறு­தி­ப்ப­டுத்­த­ப்பட்­டது. உயி­ரு­டன் இருக்­கும் ஒரு­வரே நாடு­விட்டு நாடு செல்­வ­தற்குப் பல்­வேறு சிர­மங்­க­ளைச் சந்­திக்­க­வேண்­டிய நிலை­யில் இறந்­த­வ­ரது சட­லத்தை இலங்­கைக்கு எடுத்து வருவது மிக இல­கு­வான விட­ய­மாக இருக்­க­வில்லை. அது­வும் சவூதி போன்ற நாடு­க­ளின் சட்­ட­திட்­டங்­க­ளோடு ஒப்­பி­டு­கை­யில் அது மென்­மே­லும் கடி­ன­மா­னது. அதற்­கேற்­றாற்­போல பல்­வேறு மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளின் பின்­னர் சில­நாள்­கள் கழித்­துக் கடந்த 29.12.2018 அதி­காலை அவ­ரது சட­லம் கொழும்­புக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டது.

நீர்­கொ­ழும்புப் பொலி­ஸார் மற்­றும் சட்­ட­வைத்­திய அதி­கா­ரி­க­ளின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அவ­ரது சாவு உயிர்­மாய்ப்பு என்று தெரி­ விக்­கப் பட்­டது. பின்­னர் சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது. மறு­நாள் காலை வவு­னி­யா­வுக்­குப் கொண்­டு­செல்­லப்­பட்ட சட­லம் அன்­றைய தினமே நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­டது. உழைப்புக்காக­வும், தனது குடும்­பத்தை வறு­மை­யில் இருந்து மீட்க வேண்­டும் என்ற வேட்­கை­யு­டன் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்­டுச் சென்­ற­வர் சட­ல­மாக வீட்­டுக்­குத் திரும்­பி­யி­ருந்­தார். உயிரை மாய்த்துக் கெள்ளும் நிலை­யில் அவர் வெளி­நாடு செல்­ல­வில்லை என்று கண்­ணீ­ரு­டன் தெரி­வித்த அவ­ரது தாய் தனது மக­ளுக்கு ஏற்­பட்ட நிலை வேறு எந்­தப் பெண்­க­ளுக்­கும் ஏற்­ப­டக் கூடாது என்று ஆதங்­கம் கொள்­கின்­றார். இந்­தப் பெண்­ணின் சாவுக்கு எவர் பொறுப்பு என்­பது எப்­போது கண்­ட­றி­யப்­ப­டும்? இது நீளும் கேள்­வியாகவே இருக்கிறது.

அரசு கடமை தவறியிருக்கிறது
குறிப்­பா­கத் தமி­ழர் பகு­தி­க­ளில் போருக்­குப் பின்­ன­ரான காலப் பகு­தி­யில் வெளி­நாட்­டுக்குப் பணி­ப்பெண்­க­ளா­கச் செல்­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. போருக்­குப் பின்­ன­ரான மீள்­கட்­டு­மா­னம், பொரு­ளா­தார முன்­னேற்­றங்­க­ளைப் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திக் கொடுப்­ப­தில் அர­சா­னது கடமை தவறி இருக்­கின்­றது. நீண்ட போரின் மூலம் வடக்­குக் கிழக்­கில் கண­வனை இழந்த 80 ஆயி­ரம் பெண்­கள், அவர்­கள் தலை­மை­யி­லான குடும்­பங்­கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. தமக்­கான பாது­காப்பு, வரு­மா­னம், இருப்­பி­டம் உள்­ளிட்ட பல தேவை­களை எதிர்­பார்த்து அவர்­கள் காத்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால் இவற்­றில் எது­வும் அவர்­க­ளுக்­குக் கிடைப்­ப­தா­ யில்லை. இது பற்றி எள்­ள­ள­வும் சிந்­திக்­கா­மல் இருக்­கி­றது அரசு.

எனவே அர­சின் சீரி­ய­பொ­றுப்பு இங்கு உண­ரப்­ப­டு­கின்­றது. வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­க­ளா­கச் செல்­வ­தற்­கான வரை­ய­றை­க­ளை­யும், தகு­தி­க­ளை­யும் சட்­டத்­தில் மாத்­தி­ரம் எழுதி வைக்­கா­மல் அவற்றை உறு­தி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வும் வேண்­டும். வேலைக்­க­மர்த்­தப்­ப­டும் பெண்­க­ளின் குடும்­பச் சூழல் ஆரா­யப்­பட வேண்­டும். சட்­ட­வி­ரோ­த­மான முக­வர்­கள் மீது உரி­ய­ந­ட­வ­டிக்­கை­களை எடுத்து, மத்­தி­ய­கி­ழக்கு நாடு­க­ளின் அடிப்­படைச் சட்­டம், வாழ்க்கை முறை­கள் தொடர்­பாக விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வேண்­டும் இல்­லா­வி­டில் அன்­னக்­கி­ளிக்கு ஏற்­பட்ட நிலை இன்­னும் பல பெண்­க­ளுக்கு இனி­யும் ஏற்­ப­டவே செய்­யும் .

You might also like