கொழும்பிலிருந்து வெளியேற்றப்படும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு- ரூபா 30 லட்சம் பெறுமதியான வீடு!!

கொழும்பு நகரிலிருந்து 50 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

50 ஆயிரம் குடும்பங்கள் வாழும் 400 ஏக்கர் காணியில் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மாளிகாவத்தை தொடருந்து நிலையத்துக்குச் சொந்தமான காணி, கெத்தராம அப்பிள் தோட்டம், ப்ளூமென்டல் பிரதேசத்தின் ஏரி, இரத்மலானை நீர்ப்பாசனக் காணி ஆகிய இடங்களில் வாழும் குடும்பங்கள் பிறிதொரு இடத்துக்கு மாற்றப்படவுள்ளன.

இந்தக் குடும்பங்களுக்காக 17000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு குடும்பத்துக்கு 30 லட்சம் ரூபா பெறுமதியான வீடு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஆசிய வங்கியால் உட்கட்டமைப்பு வசதிக்காக வழங்கப்படும் கடன் திட்டத்தின் கீழ் இதற்காக நிதி வழங்கப்படவுள்ளது.

மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் அமைச்சரவையில் இந்த யோசனை சமர்ப்பிக்ப்பட்டுள்ளது.

You might also like