கொழும்பில் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து!!

எதிர்­வ­ரும் 13ஆம் திகதி வெள்­ள­வத்தை, நாவல, பஞ்­சி­கா­வத்த போன்ற பகு­தி­க­ளில் குண்டு வெடிக்­கும் ஆபத்து உள்­ள­தாக தக­வல் கிடைத்­துள்­ளது என்று தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சரத் பொன்­சேகா.

நாடா­ளு­மன்­றில் நேற்­றுக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். இது தொடர்­பில் பொன்­சேகா மேலும் தெரி­வித்­த­தா­வது:

பயங்­க­ர­வா­தி­க­ளில் 150 பேரில் 50 பேர்­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று அரச தலை­வர் தெரி­வித்­தார். அப்­ப­டி­யா­யின் இன்­னும் 100 பயங்­க­ர­வா­தி­கள் இருக்­கின்­ற­னர். இது மிக­வும் எச்­ச­ரிக்­கை­யான நிலை­யா­கும்.

உள­வுத்­துறை பல­வீ­ன­ம­டைந்­த­தால்­தான் இந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக சிலர் விமர்­சித்து வந்­த­த­னர். உள­வுத்­து­றை­யில் சிலர் நீக்­கப்­ப­டு­வ­தன் மூலம் உள­வுத்­துறை பல­வீ­ன­ம­டை­ய­வில்லை. மாறாக உள­வுத்­து­றையை தொழி­நுட்ப ரீதி­யில் பலப்­ப­டுத்­த­வில்லை என்­பதே உண்மை.

மேலும் இந்த சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு பொலிஸ்மா அதி­பர் மற்­றும் பாது­காப்பு செய­லா­ளர் பதவி வில­கி­ய­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஆனால் பாது­காப்பு செய­லா­ளர் எனக்கு நன்கு தெரிந்­த­வர்.பாது­காப்பு செய­லா­ளர் என்­ற­வ­கை­யில் தாக்­கு­தல் தொடர்­பாக தக­வல் கிடைத்­ததை நான் அரச தலை­வ­ருக்­குத் தெரி­விக்­கா­மல் இருப்­பேனா என்று அவர் என்­னி­டம் தெரி­வித்­தார்.

அதே­போன்று தாக்­கு­தல் எச்­ச­ரிக்கை இருப்­பது தொடர்­பாக பாது­காப்பு கவுன்­சில் உறுப்­பி­னர்­கள் 15 தட­வைக்­கும் மேல் அரச தலை­வ­ருக்­குத் தெரி­வித்­த­னர் என்­றும் அப்­போ­தெல்­லாம் அரச தலை­வர் கண்­டு­கொள்­ளா­மல் இருந்­தார் என்று பாது­காப்­புப் பிரி­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

அத்­து­டன் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­டம் தொடர்­பாக பல்­வேறு கருத்­துக்­கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழே நான் பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­தேன். அந்த சட்­டத்­தில் குறை­கள் இருக்­கின்­ற­மை­யாலே அந்த சட்­டத்­துக்கு கீழ் என்னை கைது­செய்து சிறை­யில் அடைக்க முடி­யு­மா­கி­யது.

அத­னால் தற்­போ­துள்ள நிலை­யில் அர­சி­யல் லாபம் கரு­திச் செயற்­ப­டா­மல் நாடு­தொ­டர்­பாக அனை­வ­ரும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வ­தன் மூலமே இந்த பிரச்­சி­னை­யில் இருந்து மீள முடி­யும் – என்­றார்.

You might also like