கோழிக் குஞ்சுகளுடன் பயணிக்கும் பயணிகள் பேருந்து!!

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிப் பயணிக்கும் தனியார் பேருந்தில் கோழிக்குச்சுகளை ஏற்றிச் செல்வதால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பேருந்தின் பின்புறமாகவுள்ள ஆசனங்களில் கோழிக்குச்சுகளை ஏற்றிச் செல்வதால் பயணிகள் துர்நாற்றத்துடனான காற்றைச் சுவாசிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

கோழிக்குச்சுகளின் எச்சங்கள் பேருந்துகளில் வீசப்பட்டு சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

You might also like