சகோதரனுக்கு கடைசிக் கடிதம் எழுதிய குண்டுதாரி அலாவுதீன்!!

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் உடற்கூற்றாய்வு அறிக்கை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு முன்னதாக தனது சகோதரனுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், “நான் திரும்பி வரப் போவதில்லை பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்“ என்று அலாவுதீன் அஹமட் முவாத் குறிப்பிட்டிருந்தார் என்று அவரது மைத்துனர் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

You might also like