சட்டம், ஒழுங்கு அமைச்சு வலுவாதல் மிக அவசியம்!!

முன்னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யான சரத் பொன்­சே­காவை சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ராக நிய­மிக்க வேண்­டும் என்ற கோரிக்கை வலுப்­பெற்று வரு­வ­தைக் காண முடி­கின்­றது. தற்­போது பாது­காப்பு அமைச்­சு­டன் சட்­டம் ஒழுங்கு அமைச்­சும் அரச தலை­வர் வசமே உள்­ளது. இந்த அமைச்­சுக்­கள் ஊடா­கவே நாட்­டின் பாது­காப்­பை­யும் ஒழுங்­கை­யும் உறுதி செய்­து­கொள்ள முடி­யும் என்­ப­தால் மேற்­படி அமைச்­சுப் பொறுப்­புக்­கள் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­ன­வா­கக் காணப்­ப­டு­கின்­றன.

பொருத்­த­மா­ன­வரா
பொன்­சேகா?
சட்­டம் ஒழுங்கு அமைச்சை சரத்­பொன்­சே­கா­வுக்கு வழங்க வேண்­டு­மென்ற கோரிக்கை நீண்ட நாள்­க­ளா­கவே விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அவர் இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருந்த போதே போரை வெல்ல முடிந்­தது என்­ப­தால் நாட்­டில் சட்­டத்­தை­யும் ஒழுங்­கை­யும் அவ­ரால் நிலை­நாட்ட முடி­யு­மெ­னப் பல­ரும் நம்­பி­னார்­கள். ஆனால் அரச தலை­வ­ரின் விருப்­பம் வேறாக இருந்­தது.

பொன்­சே­கா­வு­டன் மனக்­க­சப்பு இருந்­த­தால் அவரை அமைச்­ச­ராக்­கு­வ­தற்கு அவ­ருக்கு விருப்­பம் இல்­லா­தி­ருந்­தது. தலைமை அமைச்­சர் பல தட­வை­கள் பொன்­சோ­க­வுக்கு அமைச்­சுப் பத­வியை வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்த போதி­லும் அரச தலை­வர் அதை முற்­றா­கவே நிராகரித்து விட்­டார்.

ஆனால் ராஜ­பக்ச குடும்­பத்­தி­னர் எதிர்த்­த­தன் கார­ண­மா­கவே தாம் பொன்­சே­கா­வுக்கு அந்த அமைச்­சுப் பத­வியை வழங்­க­வில்­லை­யென அவர் கூறி­யது கேலிக்­கு­ரி­யது. அரச தலை­வர் இந்த முழு நாட்­டுக்­கும் தலை­வர் என்ற வகை­யில் தமது அதி­கா­ரங்­க­ளைப் பாரட்­பட்­ச­மின்றி நிறை வேற்­றக் ­கூ­டிய வல்­லமை படைத்­த­வ­ராக இருத்­தல் வேண்­டும். நாட்­டின் பாது­காப்­பும் சட்­டம் மற்­றும் ஒழுங்­கும் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை அவர் உறுதி செய்­து­கொள்ள வேண்­டும்.

பொன்­சே­கா­வி­டம் அமைச்சு சென்­றால்
ராஜ­பக்­சாக்­க­ளுக்கு பெரும் பின்­ன­டைவு
நாட்­டின் அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான அமைச்­சர்­களே பதவி வகிக்க முடி­யும். தற்­போ­துள்ள நிலை­யில் குறித்த எண்­ணிக்­கைக்கு மேல­தி­க­மாக அமைச்­ச­ரொ­ரு­வரை நிய­மிக்க முடி­யா­தெ­னக் கூறப்­ப­டு­கின்­றது இதைக் கருத்­தில் கொண்டு பொன்­சே­கா­வுக்கு அமைச்­சுப் பத­வியை வழங்­கும் பொருட்டு அமைச்­ச­ரொ­ரு­வர் தமது அமைச்­சுப் பத­வி­யைத் துறப்­ப­தற்கு முன்­வந்­த­தா­கச் தெரி­கின்­றது.

ஆனால் அரச தலை­வர் கூறி­ய­தைப் போன்று சட்­டம், ஒழுங்கு அமைச்சு பொன்­சே­கா­வி­டம் செல்­வதை ராஜ­பக்­சாக்­கள் விரும்­ப­மாட்­டார்­கள் என்­பதை உறு­தி­யா­கக் கூற முடி­யும். ஏற்­க­னவே இரண்டு பகு­தி­யி­ன­ருக்­கு­மி­டையே பகை­மை­யு­ணர்வு உள்ள நிலை­யில் பொன்­சேகா தம்­மைப் பழி­வாங்கி விடு­வரா என்ற அச்­சம் ராஜ­பக்­சாக்­க­ளி­டம் நிறைவே உள்­ளது.

மகிந்த மற்­றும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர் சிலர் மீது மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட் ­டன. இதை­விட வேறு சிற குற்­றச்­சாட்­டுக்­க­ளும் தெரி­விக்­கப்­பட்­டன. ஆனால் இவை தொடர்­பாக அரசு உரிய நட­வ­டிக்­கை­கள் எதை­யும் மேற்­கொள்­ள­வில்லை. அர­சின் பல­வீ­னத்தை நன்­கு­ணர்ந்து கொண்ட மகிந்த அர­சுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தொடர்ந்து வெளி­யிட்டு வரு­கின்­றார்.

இந்த அரசு விரை­வில் கவிழ்ந்­து­வி­டு­மெ­னக் கூறி வரு­கின்­றார். அண்­மை­யில் நாட்­டில் இடம்­பெற்ற குண்­டுத் தாக்­கு­தல்­கள் அர­சைக் குறை­கூ­று­வ­தற்கு ஓர் அரிய வாய்ப்பை அவ­ருக்கு வழங்கி விட்­டன. முன்­னாள் இரா­ணுவ உய­ர­தி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான துணி­வை­யும் அவ­ருக்கு இந்­தச் சம்­ப­வம் அளித்து விட்­டது. எந்த வகை­யி­லா­வது ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வது ஒன்றே அவ­ரது நோக்­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றது.

வடக்­கில் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­கள் இடம்­பெ­றாத போதி­லும் உள்­ளூர் வன்­மு­றைக் கும்­பல்­க­ளின் அட்­ட­கா­சம் அத்­து­மீ­றிச் சென்று கொண்­டி­ருப்­ப­தன் கார­ண­மாக மக்­கள் அச்­ச­ம­டைந்த நிலை­யில் காணப்­ப­டு­கின்­ற­னர். கொலை, திருட்டு, கொள்ளை, தாக்­கு­தல்­கள் ஆகி­ய­வற்­றில் ஏதா­வது ஒன்று தின­மும் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

வட­ப­கு­தி­யில் சட்­ட­மும் ஒழங்­கும் சீர­ழிந்து காணப்­ப­டு­வ­தையே இந்­தச் சம்­ப­வங்­கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. உள்­ளூர் அர­சி­யல் வாதி­கள் கூட இவை தொடர் ­பா­கக் கவ­னம் செலுத்­து­வ­தா­கத் தெரி­ய­வில்லை. ஆனால் அரசு மக்­கள் துன்­பப்­ப­டும்­போது அக்­க­றை­யின்றி இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஐ.எஸ்­ஸின் தாக்­கு­த­லுக்கு
அரச தலை­வரே பொறுப்பு
பாது­காப்பு மற்­றும் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் என்ற வகை­யில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பால் மேற்­கொள்­ளப்­பட்ட அவர் பொறுப்­பேற்­கத்­தான் வேண்­டும். அது­மட்­டு­மல்­லாது சட்­டம், ஒழுங்கு அமைச்சை அவர் தொடர்ந்­தும் தமது வசம் வைத்­துக்­கொண்­டி­ருப்­பதை ஏற்க முடி­ய­வில்லை. சரத்­பொன்­சேகா சட்­டம், ஒழுங்கு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டால் ராஜ­பக்­சாக்­க­ளுக்கு நெருக்­கடி ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க முடி­யாது. அதைப்­போன்று தமி­ழர்­க­ளுக்­கும் அவர் நல்­ல­தைச் செல்­வா­ரென எதிர்­பார்க்க முடி­யாது.

கடந்த கால அனு­ப­வங்­கள் இதைத் தெளி­வாக எடுத்­துக்­காட்டி விட்­டன. ஆகவே பக்­கச்­சார்­பின்றி நேர்­மை­யா­கச் செயற்­ப­ட­வேண்­டிய ஒரு­வரை அந்த அமைச்­சுப் பத­விக்கு உட­ன­டி­யாக நிய­மிப்­பதே புத்­தி­சா­லித்­த­ன­மா­னது. இதில் தவறு ஏற்­ப­டு­மா­னால் நாடு பாத­க­மான விளை­வு­களை எதிர்­கொள்­வ­தைத் தடுத்து நிறுத்த முடி­யாது.

You might also like