side Add

சந்திரிக்காவின் வருகையால் -உடையுமா சுதந்திரக் கட்சி!!

அரச தலை­வ­ர் மைத்­தி­பால சிறி­சேன தலை மையி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி பிள­வு­படு வதற்­கான சாத்­தி­யக்­கூறுகள் அதி­க­ரித்­துள்­ளன. முன்­னாள் அரச தலை­வ­ரான சந்­தி­ரி­கா­வின் அர­சி­யல் பிர­வே­சம் அதற்கு வழி­வ­குத்­துள்­ளது.

சந்­தி­ரி­கா­வின் ஆத­ர­வு­டன் சிறி­லங்கா சுதந்தி ரக்­கட்­சி­யைச் சேர்ந்த சுமார் 20 நாடாளு மன்ற உறுப்­பி­னர்­கள் ஐக்­கி­ய­தே­சி­யக் கட்­சி­யில் இணையவுள்­ள­னர் என்­றும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யைச் சேர்ந்த ஒரு பிரி­வி­னர் ஏற்­க­னவே மகிந்த அணி­யில் இருந்து செயற்­ப­டு­கின்­ற­னர். இந்த நிலை­மை­யில் அந்­தக்­கட்­சி­யில் மேலும் பிள­வு­கள் இடம்­பெ­ற­வி­ருப்­பது அந்­தக கட்­சி­க்­குப் பின்­ன­டை­வையே ஏற்­ப­டுத்­தப்­போ­கின்­றது.

சந்­தி­ரி­கா­வின் தந்­தை­யான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்கவால் ஆரம்­பிக்­கப்­பட்­டதே சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி. பண்­டா­ர­நா­யக்க இந்த நாட்­டின் தலைமை அமைச்­ச­ரா­க­வும் பதவி வகித்­துள்­ளார். அவ­ரது மனை­வி­யான சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­க­வும் தலைமை அமைச்­சர்­ப­த­வியை வகித்­த­வர். அது­மட்­டு­மல்­லாது உல­கில் முத­லா­வது பெண் தலைமை அமைச்­சர் என்ற பெரு­மை­யை­யும் கொண்­ட­வர். அது மட்டுமல்­லாது சந்­தி­ரிகா இந்த நாட்­டின் உயர் பத­வி­யான அரச தலை­வர் பதவி யையும் இரண்டு தட­வை­கள் வகித்­த­வர்.

சந்­தி­ரி­கா­வும் கார­ணம்
மைத்­தி­ரி­பால சிறி­சேன எவ­ருமே எதிர்­பா­ராத வகை­யில் மகிந்­த­வைத் தோற்­க­டித்து அரச தலை­வர் பத­வி­யில் அமர்­வ­தற்கு சந்­தி­ரி­கா­வின் ஆத­ரவு முக்­கிய கார­ணம் என்­பதை மறு­த­லித்­து­விட முடி­யாது. அவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் இணைந்து வகுத்த வியூ­கங்­களே மகிந்­த­வின் வீழ்ச்­சிக்கு வழி­வ­குத்­தன என்பதை எவ­ருமே மறுத லித்­து­விட முடி­யாது.

அண்­மை­யில் நாட்­டில் ஏற்­பட்ட அர­சி­யல் குழப்­பங்­கள் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ரி­டையே கடு­மை­யான வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. அதி­லும் தமது தலை­வ­ரான மைத்­திரி வகுத்த திட்­டங்­கள் தோல்­வி­ய­டைந்­த­மையை அவர்­க­ளால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

இந்த நிலை­யில் சந்­தி­ரி­கா­வின் மீள் பிர­வே­சம் அவர்­க­ளி­டயே உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. தலைமை அமைச்­சர் பதவிக்­கான கனவு தகர்ந்து விட்­ட­தால் கூட்ட மைப்­பி­னர்­மீது கடு­மை­யான கோபத்தை வெளிப்­ப­டுத்­திய மகிந்த தற்­போது எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­விக்­கான போட்­டி­யில் ஈடு­பட்­டுள்­ளார். அதற்­காக எதை­யும் செய்­வ­தற்­கும் அவர் தயா­ராக உள்­ளார்.

மொட்­டுச் சின்­னத்­தில் புதிய கட்சி யொன்றை அமைத்து உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட்­டுக் கணி­ச­மான வெற்­றியை ஈட்­டிக்­கொண்ட அவர் தற்­போ­தும் தாம் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் அங்­கத்­து­வர் என்று கூறிக்­கொள்­வதை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ரால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. அதி­ருப்­தி­யில் இருந்த அவர்­க­ளுக்கு சந்­தி­ரி­கா­வின் வருகை புத்­து­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மகிந்த பக்­கம் மைத்­திரி
அரச தலை­வர் மகிந்த அணி­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வ­தில் மிக­வும் ஆர்­வத்­து­டன் உள்­ளமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. அடுத்து இடம்­பெ­ற­வி­ருக்­கும் அரச தலை­வர் தேர்­த­லில் அவர் போட்­டி­யி­டு­வ­தில் பல சந்­தே­கங்­கள் நில­வு­கின்­றன. அவ­ரது ஆத­ர­வா­ளர்­களே அந்­தத் தேர்­த­லில் இருந்து ஒதுங்கி நில்­லுங்­கள் என்று அவ­ரி­டம் வேண்­டு­கோள் விடுத்து வரு­கின்­ற­னர். அதை ஏற்­ப­தைத் தவிர அவருக்கு வேறு வழி இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்தத்துக்கு அமை­வாக ஏற்­க­னவே இரண்டு தட­வை­கள் அரச தலை­வர் பத­வியை வகித்த சந்­தி­ரி­கா­வும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாத நிலை­யி­ லுள்­ளார். வேண்­டு­மா­னால் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அவ­ரால் போட்­டி­யிட முடி­யு।ம்.

சந்­தி­ரிகா அணி­யைச் சேர்ந்த 20 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்­சி­யை­விட்டு வில­கிச் செல்­வது சுதந்­தி­ரக் கட்­சியை மேலும் பல­வீ­னப்­ப­டுத்­தும் என்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்­தான் வேண்­டும். அது­மட்­டு­மல்­லாது அவ­ருக்­குச் சார்­பான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் ஐக்­கிய தேசி­யக்­கட்சி இணைந்து கூட்டு அரசு ஒன்றை அமைத்­துக்­கொள்­வ­தற்­கான சாத்­தி­யங்­க­ளும் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றன.

சந்­தி­ரிகா தனி­வழி
மகிந்­த­வு­டன் ஏற்­க­னவே பகை­மை­யு­டன் உள்ள சந்­தி­ரிகா அவ­ரு­டன் ஒரு­போ­துமே இணைந்து செயற்­ப­ட­மாட்­டார் என்­பதை உறு­தி­யா­கக் கூற­முடி யும்.

எதிர்­வ­ரும் நாள்­கள் புதிய அர­சி­யல் குழப்­பங்­கள் நிறைந்து காணப்­ப­டு­மென்­பதை உறு­தி­யா­கக் கூறி­விட முடி­யும். அதில் தமி­ழர்­கள் தொடர்­பான விவ­கா­ரங்­கள் பின்­தள்­ளப்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­ச­மும் எழா­மல் இல்லை. அதை­யும் பொறுத்தி ருந்­து­தான் பார்க்க வேண்­டும்.

You might also like