சபாநாயகர் முன்வைத்த குற்றச்சாட்டு!!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தன்னிச்சையாகச் செயற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றின் இன்று நடைபெற்று வரும் அமர்வில், அஜித் பி.பெரேரா வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குப் பணம் செலுத்தப்படுகிறது. குறித்த ஒலிபரப்புகள் தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்களில் அறியப்படுத்திய போதும் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

You might also like