சமத்­து­வ­மும்- நியா­ய­மும்!!

நவீன உல­கத்­திலே ஈக்­கு­வா­லிட்டி (equality) மற்­றும் ஈக்­குய்டி (equity) ஆகிய இரண்டு பதங்­கள் மற்­றும் அவற்றின் பயன்­பாடு முக்­கி­யத்­து­வப்­ப­டுத்­தப்­ப­டு­ கின்­றது. இதில் ஈக்­கு­வா­லிட்டி என்­ப­தைத் தமிழ்ப்­ப­டுத்­தி­னால் அத­னைச் சமத்­து­வம் என்று சொல்­ல­லாம்.

அதா­வது எல்­லோ­ரும் எந்­த­வொரு விட­யத்­தி­லும் சம­மா­கப் பார்க்­கப்­ப­டு­வதை, கையா­ளப்­ப­டு­வ­தைக் குறிக்­கின்­றது. ஈக்­குய்டி என்­பது சமத்­து­வத்­தை­யும் தாண்­டிய நிலை­யைக் குறிக்­கி­றது. அதா­வது நியா­ய­மான சம­நி­லை­யைக் குறிக்­கி­றது என்று சொல்­ல­லாம்.

உதா­ர­ணத்­திற்­குப் பாட­சா­லைக் கல்வி முறையை எடுத்­துக்­கொண்­டால், அது சமத்­து­வ­மா­னது. நன்கு கற்­கும் மாண­வ­னுக்­கும், மெல்­லக் கற்­கும் மாண­வ­னுக்­கும் கற்­கவே திண­று­ப­வ­னுக்­கும் ஒரே மாதி­ரி­யான கற்­பித்­த­லையே பாட­சாலை ஆசி­ரி­யர்கள் மேற்­கொள்­கி­றார்­கள். பாட­சா­லை­யில் இருக்­கும் வளங்­கள், வச­தி­கள், கற்­பித்­தல் முறைமை அனைத்­தும் எல்லா மாண­வர்­க­ளுக்­கும் ஒரே மாதி­ரி­யா­ன­வையே.

இதுவே சமத்­து­வம் – (ஈக்­கு­வா­லிட்டி) எனப்­ப­டு­கின்­றது. ஆனால் நன்கு கற்­கும் மாண­வ­னுக்­கும்,மெல்­லக் கற்­கும் மாண­வ­னுக்­கும், கற்­கவே திண­றும் மாண­வ­னுக்­கும் ஒரே மாதி­ரிக் கல்வி முறை­யின் ஊடா­கக் கல்­வி­யைப் போதிப்­பது எந்த வகை­யில் நியா­ய­மா­னது? நன்கு கற்­கும் மாண­வ­னுக்கு புரி­யும் விதத்­தி­லான கற்­பித்­தல் முறைமை என்­பது மெல்­லக் கற்­கும் மாண­வ­னுக்­குக் கடி­ன­மா­ன­தா­க­வும், கற்­கவே திண­றும் மாண­வ­னுக்கு ஒன்­றும் புரி­யா­த­தா­க­வுமே இருக்­கும்.

அது­போன்றே கற்­கத் திண­றும் மாண­வ­னுக்­கான கற்­பித்­தல் முறை என்­பது நன்கு கற்­கும் மாண­வ­னுக்­குச் சலிப்­பூட்­டு­வ­தாக இருக்­கும். ஆகவே எவரெவருக்கு எந்­த­தெந்த வகை­யி­லான கல்வி முறைமை வேண்­டுமோ, அந்­தந்த முறை­யில் அவர்­க­ளுக்­குக் கல்வி போதிப்­ப­து­தானே நியா­ய­மா­னது.

அப்­ப­டிக் கல்­வி­யைப் போதிக்­கா­மல், ஒரே வித­மான பரீட்­சையை அனைத்து வித­மான மாண­வர்­க­ளும் எழுதி சிறந்த பெறு­பேற்­றைப் பெற வேண்­டும் என்று எதிர்­பார்ப்­பது நியா­ய­மற்­ற­து­தானே! இது­தான் ஈக்­கு­வா­லிட்­டிக்­கும் (சமத்­து­வம்) ஈக்­குய்­டிக்­கும் (நியா­ய­மான சம­நிலை) இடை­யி­லான வித்­தி­யா­சம்.

வட­ம­ராட்சி கிழக்­கில் மீன­வர்­கள் இடையே நடக்­கும் முரண்­பாட்­டுக்­கும் இந்த ஈக்­கு­வா­லிட்டி, ஈக்­கு­யிட்டி பிரச்­சி­னையே கார­ணம். இந்­தப் பிரச்­சி­னையை ஈக்­கு­வா­லிட்­டி­யின் அடிப்­ப­டை­யில் அணு­கு­கின்­றது கொழும்பு. அத­னா­லேயே சட்­டப்­படி எவர் வேண்­டு­மா­னா­லும், இலங்­கைக் கட­லில் கட­லட்டை பொறுக்­கும் உரி­மத்­தைப் பெறும் உரித்­து­டை­ய­வர்­கள் என்­கி­றது அது.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே வேறு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­கள் வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­ப­தும், கரை­யோ­ரத்­தில் வாடி அமைத்­துச் செயற்­ப­டு­வ­தும், பிரச்­சி­னை­யா­கத் தெரி­ய­வில்லை. தேவை­யா­னால் வட­ம­ராட்சி மீன­வர்­க­ளும் அனு­மதி பெற்று கட­லட்டை பிடிக்­க­லாம் என்­கி­றது கொழும்பு.

ஆனால், போரால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட வட­ம­ராட்சி மீன­வர்­கள் அதி­லி­ருந்து மீண்­டு­வ­ருவ­தற்­கும், தொழில்­சார் தக­மை­களை வளர்த்­துக்­கொள்­வ­தற்­கும், கால அவ­கா­ச­மும் உத­வி­க­ளும் செய்து கொடுக்­கா­மல், அவர்­களை ஏற்­க­னவே இந்­தத் தொழி­லில் தேர்ச்­சி­பெற்ற வெளி­மா­வட்­டக்­கா­ரர்­க­ளு­டன் போட்­டி­போ­டு­மாறு கேட்­ப­தும், நிர்ப்­பந்­திப்­ப­தும், நியா­ய­மா­னது அல்ல.

அப்­ப­டிப் போட்­டி­போட முடி­யாத நிலை­யி­லும், வெளி­மாவட்ட மீன­வர்­க­ளின் ஆக்­கி­ர­மிப்­பி­னால் ஏற்­ப­டும் பாதிப்பு க­ளைத் தாங்­கிக்­கொள்ள முடி­யாத நில­மை­யி­லும்தான், வட­ம­ராட்சி கிழக்கு மீன­வர்­கள் போராட்­டங்­க­ளைத் தொடங்­கி ­யுள்­ள­னர். அவர்­க­ளின் கோரிக்­கை­யின் பின்­னால் உள்ள நியா­யத்தை ஈக்­குய்­டி­யின் ஊடா­கப் பார்க்­க­வேண்­டுமே தவிர, ஈக்­கு­வா­லிட்­டி­யின் ஊடாக அணு­கக்­கூ­டாது.

கொழும்­பும், அதன் அதி­கா­ரி­க­ளும் இந்த விட­யத்தை ஈக்­குய்­டி­யின் ஊடாக அணுகி, இந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு முயற்­சிக்க வேண்­டும். அதன் பின்­னரே ஈக்­கு­வா­லிட்­டி­யைப் பற்­றிப் பேச வேண்­டும். இல்­லை­யேல் இந்த முரண்­பா­டும் பூதா­கா­ர­மாகி மோதல்­களை உரு­வாக்­கி­வி­டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close