சாத்­தான் ஓதும் வேதம்!!

‘‘எதிர்­கா­லத்­தில் அமை­யக்­கூ­டிய முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வின் ஆட்­சி­யில் முஸ்­லீம் மக்­கள் அச்­ச­மின்றி வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கு­வோம். மூவின மக்­க­ளும் ஒன்­றி­ணைந்து வாழக் கூடிய நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைப்­போம்’’.

சரி, இத்­த­னைக்­கும் மேற்­கண்ட கருத்தை எவர், எங்கு வைத்து வௌியிட்­டார் என்று எண்­ணிக் குழப்ப வேண்­டாம்.

மகிந்த அர­சின் முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய தாம் கலந்து கொண்ட முஸ்­லீம் மக்­க­ளது இப்­தார் நிகழ்ச்­சி­ யொன்­றில் வைத்தே மேற்­கண்ட கருத்தை திரு­வாய் மலர்ந்­துள்­ளார்.

மகிந்­த­வின் ஆட்­சி­யில் தாம் பாது­காப்­புச் செய­ல­ராக இருந்த வேளை­யில் இந்த நாட்­டின் சிறு­பான்மை இனத்­த­வர்­களை அவர் எத்­த­கைய சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்­லாம் நியா­ய­மற்ற வகை­யில், தமது அதி­கா­ரத் திமி­ரில் கிள்­ளுக்­கீ­ரை­க­ளா­கக் கருதி நடத்­தி­யி­ருந்­தார் என்­பது குறித்து சிறு­பான்மை இனத்­த­வர்­கள் அத்­தனை எளி­தில் மறந்­தி­ருப்­பார்­கள் என அவர் நம்­பு­கி­றாரா?

தமிழ் முஸ்­லீம் சிறு­பான்மை இனத்­த­வர்­கள் அவற்­றை­யெல்­லாம் மறந்­தி­ருந்­தால் தானே இங்கு அவற்­றைப் பட்­டி­ய­லிட்­டுக் காட்ட வேண்­டி­யி­ருக்­கும்.

அவற்­றை­யெல்­லாம் சிறு­பான்மை இனத்­த­வர்­கள் தமது வாழ்­வில் ஒரு­போ­துமே மறக்­க­மாட்­டார்­கள் என்­ப­தால் பட்­டி­யல், அது இது­ எல்­லாமே ‘வேஸ்ட்’.

ப.பரா­ப­ரன்
கைதடி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close