side Add

சாத்­தி­ய­மா­ன­தை­யும் சிந்­திக்­கத்­தான் வேண்­டும்!!

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்­சிக்கு நேர­டி­யாக ஆத­ர­வ­ளிக்­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வந்­துள்­ளதை அடுத்து கொழும்­பின் அர­சி­யல் குழப்­பம் ஒரு முடி­வுக்கு வரும் அறி­குறி தெரி­கி­றது. நாளை­ம­று­தி­னம் நாடா­ளு­மன்­றம் கூடும்­போது ரணில் தனது தரப்­புக்­குப் பெரும்­பான்மை உள்­ளதை நாடா­ளு­மன்­றப் பாரம்­ப­ரி­யத்­தின்­படி நிரூ­பிப்­பார் என்­றும் அதனை ஏற்­றுக்­கொண்டு புதிய ஆட்­சி­யி­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால அதி­கா­ரத்­தைக் கைய­ளிப்­பார் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதன்­படி நடந்­தால் 2020ஆம் ஆண்டு ஆவணி மாதம் வரை­யில் சுமார் ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட காலத்­திற்கு ரணி­லின் ஆட்சி தொட­ரும். அப்­படி அவ­ரது ஆட்­சியை அவர் தக்­க­வைப்­ப­தற்கு உத­வி­ய­மைக்­கான பிர­தி­யு­ப­கா­ர­மா­கத் தமிழ் மக்­க­ளுக்கு ஐக்­கிய தேசிய முன்­னணி எதைச் செய்­யப்­போ­கின்­றது என்­கிற பேச்சு சில தினங்­க­ளுக்கு முன்­னர் இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யில் நடந்­தது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்கும் முயற்­சி­க­ளின் அடுத்த நகர்­வாக இலங்­கை­யின் அடுத்த சுதந்­திர தினத்­திற்கு முன்­ன­தாக புதிய அர­ச­மைப்பு வரைவை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைப்­பது என்­கிற இணக்­கம் இரு தரப்­பு­க­ளுக்­கும் இடை­யில் முதன்­மை­யா­ன­தாக இருந்­தது.

தற்­போது உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய அர­ச­மைப்பு வரைவு தமிழ் மக்­கள் தரப்­பில் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாத, அவர்­க­ளின் அடிப்­ப­டைக் கோட்­பா­டு­க­ளு­டன் ஒத்­துப்­போ­காத பல விட­யங்­க­ளை­யும் உள்­ள­டக்­கி­யுள்­ளது. அர­சின் தன்மை ஒற்­றை­யாட்­சியா ஒரு­மித்த நாடா என்­பது, பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வது, வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைவு போன்ற பல்­வேறு அம்­சங்­க­ளில் தமிழ் மக்­க­ளின் கோரிக்­கை­களை இந்த வரைவு முழுமை செய்­ய­வில்லை. அதி­கா­ரப் பகிர்வு விட­யத்­தில் சில முன்­னேற்­ற­க­ர­மான அம்­சங்­களை இந்த வரைவு கொண்­டி­ருந்­த­போ­தும் தமிழ் மக்­க­ளின் வேண­வாவை முழு­மைப்­ப­டுத்­தும் விதத்­தில் அது இல்லை என்­பது வெளிப்­ப­டை­யா­னது.

அப்­ப­டி­யி­ருந்­த­போ­தும் அந்த அர­ச­மைப்பை நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­று­வ­தற்கு மூன்­றில் இரண்டு பங்கு உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தேவை. அதற்­கும் மேலாக அது பொது வாக்­கெ­டுப்பு மூலம் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் அழுத்­த­மாக வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றார். அப்­படி மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்மை மற்­றும் பொது வாக்­கெ­டுப்பு என்­கிற இரு கண்­டங்­க­ளில் இருந்­தும் புதிய அர­ச­மைப்பு தப்ப வேண்­டு­மா­னால் மகிந்த தரப்­பின் ஆத­ரவு இன்றி அது நடை­பெ­று­வது சாத்­தி­ய­மில்லை.

ஆக­மொத்­தத்­தில் புதிய அர­ச­மைப்பை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தா­லும் அதனை நிறை­வேற்­று­வ­தற்­கான சாத்­தி­யம் மிகக் குறுக்­க­லா­னதே! இந்த யதார்த்­தத்­தைப் புரிந்­து­கொண்டு அர­ச­மைப்­புத் திருத்­தங்­கள் மூலம் சாத்­தி­ய­மான சில­வற்­றை­யா­வது வென்­றெ­டுப்­பது குறித்­துச் சிந்­திப்­ப­தும் அவ­சி­யம். அத­னையே வடக்கு மாகாண முன்­னாள் எதிர்க் கட்­சித் தலை­வர் தவ­ராசாவும் சுட்­டிக்­கா ட்­டி ­யி­ருக்­கி­றார்.

வன­வ­ளப் பாது­காப்பு, வன ஜீவ­ரா­சிக் திணைக்­க­ளங்­கள் மற்­றும் தொல்­லி­யல் திணைக்­க­ளம் என்­பன தமி­ழர் நிலங்­க­ளைக் கேட்­டுக் கேள்­வி­யின்றி கைய­கப்­ப­டுத்­து­கின்­றன. மகா­வலி அபி­வி­ருத்தி நிறு­வ­னம் மற்­றப் பக்­கத்­தில் தான்­தோன்­றித் தன­மாக நடக்­கி­றது. விகா­ரை­க­ளின் ஆக்­கி­ர­மிப்பு, மீன­வர்­க­ளின் அத்­து­மீ­றல் போன்­றன மற்­றொ­ரு­பு­றம் பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றன. ஆகக் குறைந்­தது ரணில் ஆட்­சி­யின் ஊடாக இந்­தப் பிரச்­சி­னை­க­ ளிற்­கா­வது தீர்வு காண்­ப­தற்­குக் கூட்­ட­மைப்பு முயற்­சிக்­க­ வேண்­டும் என்­பதே தவ­ரா­சா­வின் கருத்து. அது பற்­றி­யும் சிந்­திக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­யம்.

You might also like