சாவகச்சேரியில் விழிப்புணர்வு ஊர்வலம்!!

தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது.

தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பமான ஊர்வலம், ஏ 9 முதன்மைச் சாலை வழியாக சாவகச்சேரி பேருந்து நிலையத்தை சென்றடைந்து, அங்கிருந்து சாவகச்சேரி நகரசபை பொது விளையாட்டு மைதானம் வரை சென்றது.

ஊர்வலத்தில் போதை ஒழிப்பு தொடர்பான பதாகைகளுடன் பெருமளவு வாகனங்களும் பங்குபற்றின.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன், பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன், சாவகச்சேரி மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்கள், பிரதேச செயலக அலுவலர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

You might also like