side Add

சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்துக்கு விருது!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி அஞ்சல் அலுவலகம் தேசிய நிலையில் சிறப்பு விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் கடந்த 2016 2017 ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

சாவகச்சேரி அஞ்சல் அலுவலகம் கடந்த 2016 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த அஞ்சல் சேவை நிலையமாக அஞ்சல் திணைக்களத்தினால் தேசிய நிலை மற்றும் மாகாண நிலைகளில் முதலிடம் பெற்றது.

அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சலர் செ.செந்தூரன் தேசிய நிலையில் சிறந்த சேமிப்பு ஊக்குவிப்பாளர் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார்.

You might also like