side Add

சிக்கியது சீனி வரி…!!

அண்­மை­யில் உரு­வாகி மறைந்த புதிய அமைச்­ச­ர­வை­யின் குறுங்­கால ஆயு­ளுக்­குள் பல சலு­கை­கள் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தன. பொரு­ளா­தார ரீதி­யாக மக்­க­ளைக் கவ­ரக்­கூ­டிய மற்­றும் முன்­னைய கூட்­டாட்சி அர­சைக் குறைத்து மதிப்­பி­டத்­தக்க வகை­யான வரிச் சலு­கை­களும் அதில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன. பொதுத்­தேர்­தல் ஒன்­றுக்­கான பல­மான சாத்­தி­யம் எதிர்­வு­கூ­றப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், குறு­கிய கால அவ­கா­சத்­தில் வழங்­கப்­பட்ட இந்­தச் சலு­கை­கள் ஒரு­வ­கைக் கட்­டி­யம் கூறல் நட­வ­டிக்­கை­யா­கவே கொள்­ளப்­பட்­டன. இதன் தொடர்ச்­சி­யா­கச் சீனி வரி­யி­லும் குறைப்பு ஒன்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. புதிய பொரு­ளா­தார அமைச்­ச­ராக விளங்­கிய மஹிந்த ராஜ­பக்ச, இனிப்­பூட்­டப்­பட்ட மென்­பான உற்­பத்­திக் கைத்­தொ­ழில்­து­றை­யி­ன­ரு­டன் மேற்­கொண்­டி­ருந்த சந்­திப்பை அடுத்து குறித்த வரிக்­கு­றைப்பு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் பிர­கா­ரம், இனிப்­பூட்­டப்­பட்ட பானங்­க­ளுக்கு 40வீத வரிக்­கு­றைப்பு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஏற்­கெ­னவே நடை­மு­றை­யி­லி­ருந்த இனிப்­பூட்­டப்­பட்ட பானங்­க­ளுக்­குச் சேர்க்­கப்­ப­டும் ஒவ்­வொரு கிராம் சீனிக்­கும் 50 சதம் வரி என்­கிற நடை­முறை மாற்­றப்­பட்டு, இப்­போது அதில் 20சதம் குறைக்­கப்­பட்டு, 30 சத­மா­கக் தொட­ரப்­பட்­டி­ருந்தது.

சீனி வரி­யின் அறி­மு­கம்

சுவை­யூட்­டிய அல்­லது சீனி சேர்த்த பானங்­களை அதீ­த­மா­கப் பரு­கு­வது நீரி­ழிவு, உடற்­ப­ரு­மன் மற்­றும் பற்­சொத்தை போன்ற சுகா­தா­ரச் சீர்­கே­டு­ க­ளுக்கு முதன்­மைக் கார­ணி­யாக விளங்­கு­வ­தாக உலக சுகா­தார அமைப்பு குறிப்­பி­டு­கி­றது. பொது­மக்­க­ளின் சீனி நுகர்­வைக் கட்­டுப்படுத்­தும் முக­மா­கச் சீனி சேர்த்த பானங்­க­ளுக்­குச் சிறப்பு வரி ஒன்றை அற­வி­டும் நடை­முறை பல்­வேறு நாடு­க­ளி­லும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டுச் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. இலங்­கை­யில் குறித்த வரி, பாதீட்டு முன்­மொ­ழி­வு­க­ளுக்கு அமை­வாக 2017ஆம் ஆண்டு நவம்­ப­ரி­லி­ருந்து நடை­மு­றைக்கு வந்­தது. கூட்­ட­ர­சின் சுகா­தார அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­தி­ருந்த பல் மருத்துவ நிபு­ணர் மருத்­து­வர். ராஜித சேனா­ரத்ன, குறித்த வரியை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தி­லும் அற­வி­டு­வ­தி­லும் பிடி­வா­த­மா­யி­ருந்­தார். குறித்த நட­வ­டிக்­கைக்கு அர­ச­த­லை­வ­ரின் ஆத­ர­வும் கிடைத்­தி­ருந்­தது.

வரிக்குக் கிடைத்த பலன்

சீனி சேர்க்­கப்­பட்ட பானங்­க­ளின் நுகர்­வைப் பொது­மக்­க­ளி­டையே குறைக்­கும் முக­மாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வரிக்­குக் கிடைத்த பலன், இலங்­கை­யின் முன்­னணி (காப­னீ­ரொட்­சைட் ஊட்­டப்­பட்ட) மென்­பான உற்­பத்­தி­யா­ள­ரான சிலோன் கோல்ட் ஸ்ரோர் நிறு­வ­னத்­தின் 2017-–2018 ஆண்­ட­றிக்­கை­யில் பிர­தி­ப­லிக்­கப்­பட்­டி­ருந்­தது. குறித்த வரி­யின் கார­ண­மாக மென்­பா­னங்­க­ளின் விலை அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து அந்த வகைப் பானங்­க­ளின் நுகர்­வில் வீழ்ச்சி காணப்­பட்­டி­ருந்­தது.

2016–-2017ஆம் ஆண்­டோடு ஒப்­பி­டு­மி­டத்து 2017-–2018ஆம் ஆண்­டில் இந்தப் பானங்­க­ளி­னால் ஏற்­ப­டும் வரு­வா­யில் 2 வீத வீழ்ச்சி காணப்­பட்ட அதே­வே­ளை­, வரிக்கு பிந்­திய இலா­பத்­தில் 34 வீத வீழ்ச்சி பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 2016-– 2017ஆம் ஆண்­டில் மென்­பான உற்­பத்­தி­யா­னா­லான வரு­மா­னம் 13 ஆயிரத்து 971 மில்­லி­யன் ரூபா­யாக காணப்­பட்­ட­து­டன் இது 2017-– 2018 இல் 13 ஆயிரத்து 649 மில்­லி­யன் ரூபாயாகக் குறை­வ­டைந்­தி­ருந்­தது. 2ஆயி­ரத்து 430 மில்­லி­யன் ரூபா­யாக 2016-–2017 காலப்­ப­கு­தி­யில் பதி­வு­செய்­யப்­பட்ட வரிக்குப் பிந்­திய இலா­பம் சீனி வரி கார­ண­மா­க­  2017 – -2018 காலப்­ப­கு­தி­யில் ஆயிரத்து 600 மில்­லி­யன் ரூபாய்­க­ளாக வீழ்ச்­சிப் போக்கை காட்­டி­யி­ருந்­தது. சீனி வரி­யின் வருகை கார­ண­மாக மென்­பா­னங்­க­ளுக்­கான விலை­யில் சரா­ச­ரி­யாக 33 வீத அதி­க­ரிப்பு செய்­யப்­பட்­டி­ருந்­த­தாக சுட்­டிக் காட்­டப்­ப­டு­கி­றது.

‘மைலோ’ பானத்­தின் மீது எகிறி விழுந்த அரச தலை­வர்

2017ஆம் ஆண்­டின் உலக நீரி­ழிவு தின நடை­ப­வ­னி­யில் கலந்­து­கொண்­டி­ருந்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன  அங்கு வழங்­கப்­பட்ட மைலோ மென்­பா­னத்­தினைக் கையி­லெ­டுத்து அத­னது சீனி உள்­ள­டக்­கம் தொடர்­பில் கர்­ஜனைசெய்­தி­ருந்­தார். ‘மைலோ’ மென்­பா­னத்­தின் சீனி உள்­ள­டக்­கம் 16.5 வீதம் என குறிப்­பிட்ட அரச தலை­வர், அது 5 வீத­மாகக் குறைக்­கப்­பட வேண்­டும் என குறிப்­பிட்­ட­து­டன் அவ்­வாறு அமை­யாத பட்­சத்­தில் அதற்­கேற்ற வகை­யில் வரி­கள் அற­வி­டப்­ப­டும் என்­றும் கூறி­யி­ ருந்­தார்.

தொற்றா நோய்­க­ளின் தாக்­கம்

தொற்றா நோய்­க­ளின் தாக்­கம் கார­ண­மாக அதிக அச்­சு­றுத்­தலை இலங்கை எதிர்­கொள்­வ­தா­கக் கூறப்­ப­டும் அதே­வேளை, நிக­ழும் இறப்­புக்­க­ளில் 75 வீத­மான இறப்­பு­க­ளுக்­கும் 20 வீத­மான (Premature) இள­வ­யது இறப்­புக்­க­ளுக்­கு­மான சூத்­தி­ர­தா­ரி­யாக தொற்றா நோய்­களே விளங்­கு­கின்­றன. இதில் சீனி மற்­றும் கொழுப்பை அதி­க­ள­வில் கொண்ட உண­வு­களை உள்­ளெ­டுப்­ப­தன் கார­ண­மா­க­வும் போது­மான அளவு சரீரத் தொழிற்­பாட்டை நிகழ்த்­தா­ த­தன் கார­ண­மா­க­வும் தொற்­றா­நோய்­கள் அதி­க­ள­வில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் அறிக்கை

இனிப்­பூட்­டிய பானங்­க­ளுக்கு வரி அற­வி­டு­வது தொடர்­பில் உலக சுகா­தார நிறு­வ­னம் வெளி­யிட்­டி­ருக்­கும்  அறிக்கைகள், குறித்த வரி­யி­டலை ஆரோக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­யா­கவே சுட்­டிக்­காட்­டு­கின்­றன. அதி­லும் இலங்கை தொடர்­பாக அந்த நிறு­வ­னம் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் 100 மில்லி லீற்­றர் பானத்­துக்கு 6 கிராம் என்­கிற நுழை­வாய் மட்ட அள­வுக்கு அப்­பால் 100 மில்லி லீற்­றர் பானத்­துக்­குச் சேர்க்­கப்­ப­டு­கின்ற ஒவ்­வொரு கிராம் சீனிக்­கும் ஒரு ரூபா வரி விதிக்­கு­மாறு விதப்­புரை வழங்­கி­யி­ருக்­கி­றது. அவ்­வ­கை­யான வரி­யி­டல், இனிப்புச் சுவை­யூட்­டிய பானங்­க­ளின் விலையை 24 வீதத்­தி­னால் அதி­க­ரிக்­கும் என்­றும் பான நுகர்வை 26 வீதத்­தால் குறைக்­கும் என்­றும் வரி வரு­மா­னத்­தினை 5.3 பில்­லி­ய­னி­னால் அதி­க­ரிக்­கும் என்­றும் எதிர்­வு­கூ­றி­யி­ருந்­தது.

முன்­னை­நாள் சுகா­தார அமைச்­ச­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன , மகிந்த அரச தலை­வ­ராக விளங்­கிய காலத்­தில் பல்­தே­சி­யக் கம்­ப­னி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­மல் தமது கைகள் கட்­டப்­பட்­டி­ருந்­த­தாகக் குறிப்­பிட்­டி­ ருந்­தார். எனி­னும் தற்­போ­தைய நிலை­யில் அது­வும் நிலமை தலை­கீ­ழாக உள்ள கட்­டத்­தில்  சீனி வரி தொடர்­பாக மக।ந்த எடுத்­தி­ருக்­கும் வரிக்­கு­றைப்பு தீர்­மா­னம் தொடர்­பில் அர­ச­த­லை­வர் தரப்­பி­ட­மி­ருந்து எதிர்ப்பு எது­வும் இது­வரை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

நாட்­டு­மக்­க­ளின் நல­னுக்குத் தீங்­கி­ ழைக்­கக்­கூ­டி­ய­தும் இலா­ப­மீட்­டும் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வா­ன­து­மான தீர்­மா­ னத்­தி­னால் முன்­னைய அர­சி­னால் நடை­மு­றைக்­கி­டப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளில் முன்­னுக்­கு­பின் முர­ணான நிலமை தற்­போது தோற்­று­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. புகை­யி­லை­ மருந்­துப்­பொ­ருள்­கள் மற்­றும் சீனி உள்­ள­டங்­கிய பானங்­கள் தொடர்­பில் இறுக்­க­மான நடை­மு­றை­கள் தொடர்ச்­சி­யாக நடை­மு­றைப்­டுத்­தப்­பட்டு வந்த நிலை­யில்  குறு­நாள் அர­சி­னால் சீனி வரி தொடர்­பில் எடுக்­கப்­பட்­டி­ருக்­கும் தீர்­மா­ன­மும் அதற்கு அர­ச­த­லை­வர் காண்­பித்­தி­ருக்­கும் ‘கப்­சிப்’ நில­வ­ர­மும் ஆரோக்­கி­ய­மற்ற தொடர்ச்­சி­க­ளுக்­கான ஆரம்ப கட்­ட­மா­கவே புலப்­ப­டு­கின்­றன.

You might also like