சிங்களப் பத்திரிகையில் சுற்றப்பட்டிருந்த ரவைகள்!!

மன்னார்; கோந்தை பிட்டியில் வீட்டுக் காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

சிலாபத்துறை கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.கிருஸாந்தன் தலைமையில் சென்ற பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் ரவைகளை மீட்டனர்.

தென்னை மரத்துக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.

அவை சிங்கள பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்டடு புதைக்கப்பட்டிருந்தன எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like