சிந்­த­னைக்கு!

கிரேக்க இதி­கா­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­பட்ட ஒரு ஆங்­கி­லப் படம் ‘ட்ரோய்’. 2004ஆம் ஆண்டு வெளி­யாகி உல­கம் எங்­கும் சக்­கை­போடு போட்ட படம். கிரேக்­கத்­தின் புகழ்­பெற்ற கவி­யான ‘கோமர்’ எழு­திய ‘இலி­யாட்’ என்­கிற இதி­கா­சத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு எடுக்­கப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட மகாபார­தம் போன்ற ஒரு இதி­கா­சம் இது. கிரேக்க ஆட்­சி­யா­ளர்­க­ளால் பல தசாப்­தங்­க­ளாக வீழ்த்த முடி­யாது இருந்த ‘ட்ரோய்’ நாட்டை கைப்­பற்­று­வ­தற்­கான சண்­டை­யைப் பற்­றிய பாடல்­கள்­தான் இலி­யாட் காவி­யத்­தின் மையம். அதை­யொட்­டித்­தான் ‘ட்ரோய்’ பட­மும் உரு­வாக்­கப்­பட்­டது. வசூலை வாரிக் குவித்­த­தில் படங்­க­ளின் பட்­டி­ய­லில் முன் வரி­சை­யில் உள்ள படம்.

அந்­தப் படத்­தில் போர் பற்­றிய காட்­சி­யின் ஒரு வரி­யில் இப்­ப­டிச் சொல்­லப்­பட்­டி­ருக்­கும், ‘‘போர் என்­பது இளை­ய­வர்­கள் மாள்­வ­தும், முதி­ய­வர்­கள் பேசிக் கொண்டே இருப்­ப­தும் ­தான் என்­பது உனக்­குத் தெரி­யாதா என்ன, இது­போன்ற அர­சி­ய­லைத் தூக்கி எறி.’’

‘ட்ரோய்’ நக­ரத்­தைக் கைப்­பற்­றும் முற்­று­கையை ஆரம்­பிப்­ப­தற்­காக கடல் வழி­யா­கப் பெரும் கப்­பல்­க­ளில் வந்­தி­றங்­கிய கிரேக்­கப் படை­க­ளில் முன்­ன­ணி­யில் வந்து கடற்­க­ரை­யில் தரை­யி­றங்கி முதல் வெற்­றி­யைப் பறித்து மொத்­தக் கிரேக்­கப் படை­க­ளும் தரை­யி­றங்க வழி வகுத்த தள­ப­தி­யும் தன்­னி­க­ரற்ற வீர­னும் ‘ட்ரோய்’ சண்­டைக்­கா­கவே பிறந்­த­வ­னு­மான அக்­கி­லீ­ஸைப் பார்த்து இந்த வார்த்­தை­கள் சொல்­லப்­ப­டும். ‘ட்ரோய்’ கரை­யில் முதல் வெற்­றியை அவனே பதிவு செய்­த­போ­தும், போருக்­குத் தலைமை தாங்­கிய கிரேக்க மன்­னன் அகம்­மென்­னனை அந்த வெற்­றிக்­காக ஏனைய மன்­னர்­க­ளும் தள­ப­தி­க­ளும் பாராட்­டும் தரு­ணத்­தைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கும் அக்­கி­லீ­ஸி­டம் இந்­தக் கருத்­துச் சொல்­லப்­ப­டு­வ­தாக அந்­தக் காட்சி இருக்­கும்.

அமெ­ரிக்க அதி­ப­ராக இருந்­த­வ­ரான பிராங்­கி­ளின் ரூஸ்­வெல்­டின் புகழ்­பெற்ற மேற்­கோள்­க­ளில் ஒன்­றும் இது­தான். ‘‘போர் என்­பது இளை­ஞர்­கள் சாவ­தும் முதி­ய­வர்­கள் பேசிக் கொண்­டி­ருப்­ப­தும்­தான்’’ என்று சொல்­லி­யி­ருப்­பார் அவர்.

இங்கே முதி­ய­வர்­கள் என்ற குறி­யீட்­டால் சுட்­டப்­ப­டு­ ப­வர்­கள் அர­சி­யல்­வா­தி­க­ளா­க­வும், இளை­ஞர்­கள் என்ற குறி­யீட்­டால் சுட்­டப்­ப­டு­ப­வர்­கள் ஆயு­தங்­களை ஏந்தி நேர­டி­யா­கப் போரில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளா­க­வுமே இருக்­கி­றார்­கள். ஈழப் போரி­லும் இதனை அப்­பட்­ட­மா­கப் பார்க்­க­லாம்.

மூத்த தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளின் மேடை முழக்­கங்­க­ளும், வீரா­வே­சப் பேச்­சுக்­க­ளும் ஆயு­தப் போராட்­டத்­துக்கு இளை­ஞர்­களை வழிப்­ப­டுத்­தின. அதன் விளை­வாக ஆயி­ரம் ஆயி­ர­மா­கத் தமிழ் இளை­ஞர்­க­ளும், இறு­தி­யில் லட்­சம் வரை­யி­லான பொது­மக்­க­ளும் தமது உயிர்­களை ஆகு­தி­யாக்­கி­ய­து­தான் வர­லாறு.

தமது வீரா­வே­சப் பேச்­சுக்­க­ளா­லும், மேடை முழக்­கங்­க­ ளா­லும் வீறு கொண்ட இளை­ஞர்­கள் உசுப்­பேற்­றப்­பட்டு ஆயு­தப் போராட்­டத்­தைத் தொடக்­கிய பின்­னர், ‘‘தம்­பி­க­ளுக்கு இரா­ஜ­தந்­தி­ரம் தெரி­ய­வில்லை’’ என்று தலை­வர்­கள் பேசி­ய­தும் வர­லாறு. அத்­த­கைய பேச்­சுக்­கள், தீட்­டிய மரத்­தையே கத்­தி­கள் கூர் பார்த்த கதை­யாக மாறி­ய­தும் வர­லாறு.

தியாகி பொன். சிவ­கு­மா­ர­னின் நினைவு நாள் நேற்­றுக் கடைப்­பி­டிக்­கப்­பட்ட நிலை­யில், அத­னை­யொட்டி நடந்த வேறு சில நிகழ்­வு­க­ளை­யும் பார்க்­கும்­போது மீண்­டும் முதி­ய­வர்­கள் பேசத் தொடங்­கி­விட்­டார்­களோ என்­கிற ஐயம் ஏற்­ப­டு­கின்­றது. கடந்த கால அர­சி­யல் வர­லா­றும், ஆயு­தப் போராட்­டத்­தின் வேத­னை­யும், விளை­வின் விவ­ர­மும் சரி­வ­ரத் தெரி­யாத இளை­ஞர் கூட்­டம் ஒன்­றும் வளர்ந்து வரும் நிலை­யில் ‘‘போர் என்­றால் இளை­ஞர்­கள் சாவ­தும் முதி­ய­வர்­கள் பேசு­வ­தும் வழ­மை­தானே!’’ என்­கிற வரி­கள் ஞாப­கத்­துக்கு வரு­வ­தைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

மீண்­டும் உயிர்ப் பலி கேட்­கும் உசுப்­பேற்­றல்­கள் தேவையா என்­பது சிந்­த­னைக்­கு­ரி­யது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close