சிரியாவில் வான்வழி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழப்பு!

சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவின் பல பகுதிகளை ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக சிரியா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே, அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் தொடர்ந்தும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் உள்ள ஹிடாஜ் எனும் கிராமத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கக் கூட்டுப்படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அங்கு இயங்கிவரும் பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3.5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close