சிவ­ந­கர் அ.த.க. பாட­சா­லை­யின் -கபடி அணி­க­ளுக்கு மதிப்­பு­றுத்­தல்!!

பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான தேசிய மட்ட கப­டித் தொட­ரில் கிளி­நொச்சி சிவ­ந­கர் அர­சி­னர் தமிழ்க் கல­வன் பாட­சா­லை­யின் 17 வய­துப் பெண்­கள் அணி முத­லி­டத்­தை­யும், 20 வய­துப் பெண்­கள் அணி மூன்­றா­வது இடத்­தை­யும் பிடித்­ததை அடுத்து நடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் அந்­தப் பாட­சா­லைக்கு நேரில் சென்று கபடி வீராங்­க­னை­களை மதிப்­பு­றுத்­தி­னார்.

நேற்று நடை­பெற்ற இந்த மதிப்­பு­றுத்­தல் நிகழ்­வில் அவர் உரை­யாற்­று­கை­யில், ‘‘இரண்­டா­யி­ரத்து மூன்­றாம் ஆண்­டுக்­குப்­பின்­னர் கபடி என்­றால் சிவ­ந­கர்­தான் என்­கின்ற பெயரை கிளி­நொச்சி மாவட்­டத்­தில் நிலை­நாட்­டிய இந்­தப் பாட­சாலை மாண­வர்­கள் பதி­னைந்து ஆண்­டு­க­ளைக் கடந்து அதே பெயரை தேசிய ரீதி­யில் தொடர்ந்­தும் தக்க வைத்­தி­ருப்­பது, எமது மாவட்­டத்­திற்­கும், வடக்கு மாகா­ணத்­திற்­கும் பெரும் மதிப்­பைத் தேடித் தந்­துள்­ளது.

கோட்­டம், மாவட்­டம், மாகா­ணம் என்ற படி­நி­லை­க­ளைத் தாண்டி எமது மாண­வர்­கள் தேசிய மட்ட போட்­டி­க­ளில் பங்­கு­பற்­று­வதே சவால் நிறைந்த விட­ய­மாக இருக்­கின்ற நிலை­யில் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பொரு­ளா­தார நெருக்­கடி நிறைந்த உருத்­தி­ர­பு­ரம், சிவ­ந­கர் பகு­தி­யில் அமைந்­துள்ள கிரா­மப்­புற பாட­சா­லை­யின் மக­ளிர் அணி இவ்­வா­றான சாத­னை­களை தேசி­யத்­தில் படைக்­கின்­றமை பெரும் மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது.

பௌதீக வளத்­தே­வை­க­ளோடு பயிற்­சி­களை மேற்­கொள்­வ­தற்­கான நவீன வச­தி­க­ளு­டன் கூடிய மைதா­னம் கூட இல்­லாத நிலை­யில், வறு­மை­யும், வலி­க­ளும் எமது திற­மைக்­குத் தடை­யல்ல என்­பதை நிரூ­பித்து கபடி என்­றால் சிவ­ந­கர்­தான் என்ற மகு­டத்தை மீண்­டு­மொ­ரு­முறை தேசிய ரீதி­யில் நிலை­நாட்­டி­யுள்ள வீராங்­க­னை­கள், பயிற்­று­விப்­பா­ளர்­கள், பெற்­றோர்­கள், பாட­சா­லைச் சமூ­கத்­தி­னர் அனை­வ­ருக்­கும் பாராட்­டுக்­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்’’ என்று அவர் தெரி­வித்­தார்.

You might also like