சுகாதார அமைச்சர் வடக்குக்கு திடீர் வருகை!!

வடக்குக்கு நாளை வர­வுள்ள சுகா­தார அமைச்­சர் தீவ­கத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­ க­ளுக்­குச் சென்று, அங்­குள்ள நில­மை­களை ஆராய்­வார் என்று அமைச்­சுத் தக­ வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கொழும்பு சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன நாளை வடக்­குக்கு வரு­கின்­றார். சுகா­தா­ரம் தொடர்­பான பல வேலைத் திட்­டங்­களை அவர் ஆரம்­பித்து வைக்­க­வுள்­ளார். அத்­து­டன் மருத்­து­வ­ம­னை­க­ளில் காணப்­ப­டும் குறை­பா­டு­கள் தொடர்­பா­க­வும் அவர் ஆரா­ய­ வுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம், தீவ­கத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­கள் பல்­வேறு வளப் பற்­றாக்­கு­றை­க­ளு­டன் இயங்­கு­கின்­றன என்று கூறப்­ப­டும் நிலை­யில் அவர் அங்கு சென்று நில­மை­களை நேரில் ஆரா­ய­வுள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­ கின்­றது.

சுகா­தார அமைச்­சர் நாளை வவு­னியா பொது மருத்­து­வ­ம­னை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரிவை ஆரம்­பித்து வைக்­க­வுள்­ளார். நெதர்­லாந்து நாட்­டின் அபி­வி­ருத்­தித் திட்­டத்­தின் ஆரம்ப நிகழ்­வி­லும் கலந்­து­கொள்­ள­வுள்­ளார்.

மறு­நாள் அவர் தீவ­கத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் செல்­ல­வுள்­ளார். அங்­குள்ள தேவை­கள் தொடர்­பா­கக் கேட்­ட­றி­ய­வுள்­ளார்.
16ஆம் திகதி அவர் பருத்­தித்­துறை மருத்­து­வ­ம­னை­யில் நெதர்­லாந்து நாட்­டின் அபி­வி­ருத்­தித் திட்ட ஆரம்ப நிகழ்­வில் கலந்­து­கொள்­ள­வுள்­ளார். பின்­னர் மாங்­கு­ளத்­தில் அமைக்­கப்­ப­ட­வுள்ள மறு­வாழ்வு மருத்­து­வ­ம­னை­யின் அடிக்­கல் நடும் நிகழ்­வில் கலந்­து­கொள்­ள­வுள்­ளார் என்று அமைச்­சுத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

You might also like