சுரங்கத்தில் வெடி விபத்து – 17 பேர் உயிரிழப்பு!!

உக்ரைன் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து நடந்துள்ளது.

சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கினர்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

You might also like