சுவர் இடிந்து வீழ்ந்து -தொழிலாளர்கள் அறுவர் உயிரிழப்பு!!

கூலித் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகத் தங்குமிடத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில், அங்கிருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புனேவில் உள்ள அம்பேகான் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

புனே உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகத் தங்குமிடத்தில் இன்று அதிகாலை சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like