செல்வம் தங்க செய்ய வேண்டியவை!!

வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும்.

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க பணம் வரும்.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வெளியேறக்கூடாது .பணம் ஓடிவிடும்.

பசுவின் கோமியத்தைத் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் . 45 நாள்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாகக் கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்ரிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

You might also like