சோதிடம் எனும் பரிகாரம்!!

0 91

சோதி­டம்
கல்­லா­மல் பண்­டி­தர்­தம் கண்­ட­படி குள­றிப்­ப­லன்
இல்­லா­மல் குறப்­பெண் கூடத் தாய் இசைத்­தி­டில்
கசை­யே­யா­கும்
அல்­லால் சோதி­டப்­ப­லன்­கூறி அவ­தியை சாத­கர்க்கு
சொல்­லா­மல் சொல்லி வைப்­பார் சோர்­வு­ப­டச் சொல்­லார் தானே!
ஆம், மனித குலம் எச்­ச­ரிக்­கை­யோடு வாழ்­வ­தற்கு இறை­வன் அரு­ளிச் செய்த சாஸ்­தி­ரிய வாழ்­வுக் கணக்கு முறை­மை­யையே சோதி­டம் என்­கி­றோம். உண்­மை­யில் தவ­மி­ருந்து விர­த­மோடு குரு சிஷ்ய முறை­யில் கவ­னச் சிதை­வின்றி மொழி­யப்­பட்ட சோதி­டக்­க­லையை இன்­றும் அதே மகத்­து­வங்­க­ளோடு பய­பக்­தி­யா­கக் கூறி சோதி­டக் கலை­யின் தனித்­து­வங்­க­ளைப் பேணு­வோர் இன்­றும் இருக்­கின்­ற­னர். மாறாக உள்­ளதை உள்­ள­படி கூற முன்­வ­ராது சொல்ல வேண்­டி­ய­வற்­றைத் திரி­பு­ப­டுத்­திச் சொல்­வோ­ரும் எம்­மி­டையே இருக்­கவே செய்­கி­றார்­கள்.

அருள்­வாக்கு
இங்கு அருள் வாக்கு என்­பது, சோதி­டக் கலையை கற்­கா­மல் அரை குறை­யோடு கற்­ற­வர் போலக் காட்­டிக்­கொண்டு வேண்­டத்­த­கா­த­ன­வற்றை உள­றி­யும், சாத­க­ரைத் தளம்­பல் நிலை­யில் வைத்­தும் அவ­தி­யு­றச் செய்­யும் காரி­ய­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது. மாறாக, சாத­கர்க்கு நடக்­கப் போவதை ஒளிவு மறை­வின்றி வெளிப்­ப­டுத்­து­வ­தும், அவ­ர­வர் நிலைக்கு ஏற்ப விட­யங்­களை சொல்­லா­மல் சொல்லி உண­ரும்­ப­டி­யாக வெளிப்­ப­டுத்­து­கின்ற தனித்­துவ நிலை­யாக அமைய வேண்­டும்.
இத­னி­டையே வியா­பார நோக்­கோடு தோஷ­நி­வா­ரண பரி­கார பாவனை செய்து பண­மீட்­டும் காரி­யம் ஒரு போதும் சித்­திக்­காது. சோதி­ட­மும் பலிக்­காது.

பலா­ப­லன்
கதி­ர­வன் உதிக்­கு­முன்­பும் காரி­ருள் மறைக்­கும் பின்­பும்
மதி­ய­வன் வெளிச்­ச­முன்­னும் வருஞ்­சு­டர் தீப­முன்­னும்
அதிர்­பெற சோதி­டத்­தில் துர்ப்­ப­லன் நற்­ப­லன் யார்க்­கும்
சதிர்­பெ­றத்­தோற்றா தாகும் சாத­கம் கூறத்­தானே!
இங்கு, முதல் நாய­க­னா­கிய சூரி­யன் உதிப்­ப­தற்கு முன்­பும், அஸ்த்­த­மித்த பின்­பும், வெண்­ணி­லா­வின் பட்­டொளி வெளிச்­சத்­தி­லும், மங்­க­லான வெளிச்­சத்­தி­லும், இருள் கவிந்த பின்­பும், வழி, ­தெரு­வி­லும், வீட்­டுக்கு வீடு­சென்­றும் சொல்­லு­கின்ற சோதி­டத்­தால் எந்­த­வித பலா­ப­ல­னும் இல்லை. இதன்­வ­ழியே சோதி­டர்­கள் நன்மை பெறு­கின்­ற­னர். சாத­கர்­கள் கவ­லை­யும் துன்­ப­மும் பீடை­யும் பெருக அந்­த­ரிக்­கின்­ற­னர்.
சோதி­டம் பார்ப்­ப­தற்­கும், சொல்­வ­தற்­கும், கேட்­ப­தற்­கும், எழு­து­வ­தற்­கும் குறித்­த­தோர் கால வரை­யறை உண்டு. ஆங்கு பக்­கு­வம் உண்டு. அகால நேரங்­க­ளில் சோதி­டம் பார்த்­தால் இறை­வன் திரு­வ­ருள் பாலிக்க மனம் கொளார். சாத­கர்­க­ளுக்கு ஆபத்து நேரும். எனவே சாத­கர்­கள் அசுப நேரங்­க­ளில் செல்­லாது, சுப­நே­ரங்­க­ளில் சென்று, பணிந்து வெற்­றிலை பாக்கு தட்­ச­ணை­யு­டன் பலன் கேட்­பதே சிறந்­தது. யாவும் வாழ்­வில் சித்­திக்­கும். தட்­சணை என்­பது கூலி­யல்ல. இறை­வாக்­குக்­கு­ரிய அனு­மா­னம்.

தோஷம்
அனு­மா­னங்­கள் இல்­லா­த­போது சாத­கர்­க­ளுக்கு தோஷம் ஏற்­ப­டும். அது சந்­ததி சந்­த­தி­யா­கச் சாத­கரை துன்­பு­றுத்­தும். ஆக, கொடுக்க இய­லு­மா­னதை உப­கா­ரம் செய்­ய­வேண்­டும்.  முற்­பி­றப்­பிலே ஆத்­மா­வுக்­குப் பொறுப்­பா­ன­வர்­கள் செய்த நல்­வி­னைப் பயன்­கள் நற்­ப­லா­ப­லனை அள்­ளித்­த­ரும். ஆற்­றப்­பட்ட தீவி­னை­கள் வாழ்­வில் சமத்­து­வ­மின்­மையை தந்­தி­ருக்­கும். குழப்­பங்­க­ளும் சண்டை சச்­ச­ர­வு­க­ளும் தீவி­ர­மா­கும். எனவே தான் அவ­ர­வர் சொந்த உழைப்­பால் ஏற்­பட்ட சொத்­துக்­கள் நீடுழி வாழ்­கின்­றன. சுரண்­டப்­பட்ட அத்­தனை சொத்­துக்­க­ளும் மண்­ணோடு மண்­ணாய்ப் போகின்­றன.

தீண்­டத்­த­காத மனித இயல்­பு­கள்
மேலும், “கள்ள உறுதி முடிப்­ப­வர்­கள், கடமை நேரத்­தில் மேலு­மொரு வரு­மா­னத்­துக்கு வழி­கோ­லு­வோர், வீதி­வி­பத்து நிகழ ஏது­வாக இருத்­தல், போலி­களை உற்­பத்தி செய்­தல், பிறந்த குழந்­தை­க­ளைக் கொலை செய்­தல், கருக்­க­லைத்­தல், பசு­வதை செய்­தல், பழங்­க­ளுக்கு நஞ்­சூட்­டு­தல், பேயோட்­டு­தல், உண்­டி­யல் திரு­டு­தல், விக்­கி­ர­கம் திரு­டு­தல், விக்­கி­ர­கம் உடைத்­தல், இன மத மொழி ஜாதி­யம் துவே­ஷித்­தல், வீட்­டு­நாய்­க­ளின் காலைக் கடன்­களை வீதி­யி­லி­ருக்க விடு­தல், வீட்­டில் பிறந்த நாய்க்­குட்­டி­களை மூட்டை கட்டி சந்­தி­யி­லும் சந்­தை­யி­லும் அந்­த­ரிக்க விடு­தல், ஆபா­சப் படங்­க­ளைக் கசிய விடு­தல், ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­க­ளது நட­வ­டிக்கை, விரும்­பியோ விரும்­பா­மலோ உட­லு­றவு கொள்­ளு­தல், முது­மையை இள­மை­யாக்­கு­தல், வேத மந்­திர திரு­மறை திரு­முறை சமய சம்­பி­ர­தா­யங்­க­ளுக்­குக் குந்­த­கம் விளை­வித்­தல், பத­விக்­கா­க­வும் கதி­ரைக்­கா­க­வும் சூழ்ச்சி செய்­தல்.” என அனைத்து விட­யங்­க­ளை­யும் இறை­வன் ஏற்­பு­டை­ய­தாக கொள்ள மாட்­டார். வாழ்­வில் நற்­ப­ல­ப­லன்­களை அருள மாட்­டார்.

இணுவை காணா.பால­சுந்­த­ர­மூர்த்தி தனது சோதிட நூலில் குறிப்­பி­டும் போது, “பெரி­யோர் செல­வுக்­காக வைத்­தி­ருந்த முது­சொம்­க­ளைக் கவர்ந்து அவர்­க­ளைக்­கொன்ற தோஷம், ஆடு, மாடு, கோழி, நாய் முத­லான பிரா­ணி­களை தண்­டித்­துக் கொன்ற தோஷம், பொருள்­க­ளைக் கள­வா­டிய தோஷம், வறி­ய­வர், சிறு­வர், முதி­யோர், பாட­சாலை, ஆல­யம், அரச பொதுச் சொத்­துக்­க­ளில் குடும்ப நலன் பேணி பசி­யா­றி­ய­வர்­கள், மந்­திர தந்­திர, வைத்­திய மருந்து, விவ­சாய, வியா­பார, வாகன, வாடகை,தரகு, அடகு முயற்­சி­க­ளில் பாத­கம் செய்­தோர், பிறர் மனை­வி­யோடு சல்­லா­பம் புரிந்­த­வர்­கள், புரி­ப­வர்­கள், பாலி­யல் இம்சை, பாலி­யல் உறவு, பாலி­யல் லஞ்­சம், பாலி­யல் வேட்கை என மாணவ மாண­வி­ய­ரின் வாழ்­வி­யலை சிதைத்த மிரு­கங்­கள், நிதி, நீதி, நிர்­வாக விட­யங்­க­ளில் ஊழல் மோசடி புரிந்­த­வர்­ கள், கடத்­தல், களவு, போதை, மது, விபச்­சா­ரம், அப­க­ரிப்பு, கொலை, கொடூ­ரம், அடா­வ­டித்­த­னம்,தூஷித்­தல், வாள்­வெட்டு, பய­மு­றுத்­தல், பரீட்­சை­யில் குள­று­படி செய்­யும் ஆசி­ரி­யர் மற்­றும் மாண­வர்­கள், ஒரு தாரம் போதா­தென்று இரண்டு மூன்று நான்கு தாரம் செய்­த­வர்­கள், பெண் வீட்­டாரை வருத்தி இலட்­சோப இலட்­சம் பெறு­மதி உடைய சொத்­துக்­க­ளைச் சுதா­க­ரித்­த­வர்­கள், மாதா, பிதா, குரு, தெய்வ சம்­பி­ர­தா­யங்­களை மீறு­வோர்.” என அனை­வ­ருமே தோஷம் உடை­ய­வர்­கள் என்று சுட்­டு­கி­றார். ஆம், இவர்­கள் அனை­வ­ருமே பொது­வி­ட­யங்­க­ளி­லி­ருந்து விலக்­கப்­பட வேண்­டி­ய­வர் களே.

You might also like