சௌந்தர்யா – விசாகன் திருமணத்தில் பிரபலங்கள் பங்கேற்பு!!
நடிகா் ரஜினிகாந்தின் மகள் சௌந்தா்யா மற்றும் தொழிலதிபா் விசாகன் வனங்காமுடி திருமணம் சென்னையின் பிரபல நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை வரவேற்பு நிகழ்ழ்வும் நடைபெற்றது.
குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி வேலுமணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.