side Add

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி!!

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 75 நாள்கள் தீவிர சிகிச்சைக்கு பின், 2016 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது 2ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி பேரணி நடப்பதால், பாதுகாப்பு பணியில் ஏராளமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You might also like