ஞானசார தேரரரின் தீர்ப்புக்காக காத்திருப்பு – ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு!!

ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக, பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவருக்கான தண்டனை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதால், நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 10 பேரைக் கொண்ட பிக்குகள் அடங்கிய குழுவொன்று நீதிமன்ற வளாகத்தில் கூடியுள்ளனரர்.

அத்துடன், இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்புக்காக, உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close