டோனர் கமராக்களுக்கு தடை!!

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலமைகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக சகல விதமான பறக்கும் படப்பிடிப்பு கருவிகள் (டோனர் கமராக்கள்) பறக்க விடுவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாண தீபகற்பத்தில் டோனர் கமராக்களை வைத்திருப்பவர்கள், அவை சம்மந்தமான சகல விதமான விபரங்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்படாத டோனர் கமராக்கள் இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன், கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று படையினர் அறிவித்துள்ளனர்.

You might also like