தமி­ழர்­கள் ஒரு­போ­தும்- அடங்­கிப்­போக மாட்­டார்­கள்!!

சிங்­கப்­பூ­ரின் சிற்பி என்று வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர் அந்த நாட்­டின் முன்­னாள் தலைமை அமைச்­சர் லீ குவான் யூ. சுமார் 30 ஆண்­டு­கள் நாட்டை ஆண்­ட­வர். சிங்­கப்­பூர் என்­கிற நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பி­ய­வரே அவர்­தான் என்­கி­றார்­கள். தன்­னு­டைய காலத்­தி­லேயே மூன்­றாம் உலக நாடு­க­ளில் ஒன்­றாக இருந்த சிங்­கப்­பூரை முத­லா­வது உலக நாடு­க­ளில் ஒன்­றாக மாற்­றிக் காட்­டி­ய­வர். அது­வும் ஒரே தலை­மு­றைக் காலத்­துக்­குள் அதைச் சாத்­தி­ய­மாக்­கிக் காட்­டி­ய­வர். இலங்­கை­யில் போர் நிறை­வுக்கு வந்த சம­யத்­தில் ஊட­கம் ஒன்­றுக்கு வழங்­கிய பேட்­டி­யில், ‘‘போரை இலங்கை அரசு வென்­றி­ருந்­தா­லும் தமி­ழர்­கள் அடங்­கிப் போவார்­கள் என்று நான் நம்­ப­வில்லை.’’ என்று அவர் சொன்­னார்.

வடக்­குக் கிழக்கு எங்­கும் நேற்­றை­ய­தி­னம் நடந்த தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்க மாவீ­ரர்­கள் நாள் வெகு எழுச்­சி­யோடு, நேர்த்­தி­யான ஏற்­பா­டு­க­ளோடு நடை­பெற்­ற­தைப் பார்த்­த­போது லீ குவான் யூவின் அந்­தத் தீர்க்க தரி­ச­ன­மான பார்­வை­தான் மீண்­டும் மீண்­டும் ஞாப­கத்­துக்கு வந்­தது.
சில வரு­டங்­க­ளுக்கு முந்­தையை மாவீ­ரர் நாள் நினை­வு­களை மீட்­டிப் பார்க்­கும்­போது லீயின் கருத்­துக்­க­ளைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

9 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் மாவீ­ரர் நாள் என்­பதை உச்­ச­ரிப்­ப­தற்­குக்­கூட அச்­சப்­ப­டும் நிலமை இருந்­தது. 2010, 2011ஆம் ஆண்­டு­க­ளிலே வெளி­நா­டு­க­ளில் மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் நடக்­கின்­றன என்­கிற செய்­தியை உத­யன் பத்­தி­ரி­கை­யில் வெளி­யி­டு­வதே ஆபத்­தைக் கொண்டு வருமோ, செய்­தி­யா­கக்­கூட அதை வெளி­யி­டு­வதை வைத்து மகிந்த அரசு பத்­தி­ரி­கை­யையே தடை செய்­யுமோ என்று அஞ்சி அஞ்­சிச் செய்­தியை வெளி­யி­ட­வேண்­டி­யி­ருந்­தது.

மாவீ­ரர் நாளை நினை­வேந்­தி­ய­தன் கார­ண­மாக யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தாக்­கப்­பட்­டார்­கள். அவர்­கள் மட்­டு­மல்­லர் அந்­தச் செய்­தி­யைச் சேக­ரிக்­கச் சென்ற உத­யன் பத்­தி­ரி­கை­யின் ஆசி­ரி­யர் பல்­க­லைக்­க­ழக மாண­வர் விடு­தி­யின் அருகே வைத்­துத் தரைப் படை அதி­காரி ஒரு­வ­ரால் தாக்­கப்­பட்­டார். அவ­ரது ஒளிப்­ப­டக் கரு­வி­யைப் பறித்­தெ­டுப்பதற்கு அடை­யா­ளம் தெரி­யா­த­வர்­கள் முயற்­சித்­தார்­கள்.

அது பற்­றிக் கொடுக்­கப்­பட்ட முறைப்­பாடு மீது பொலி­ஸார் எந்த நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்க மறுத்­தார்­கள். மாண­வர்­கள் மீதான அடக்­கு­மு­றை­யைக் கண்­டித்து மறு­நாள் பல்­கலை மாண­வர்­கள் நடத்த முற்­பட்ட அமை­திப் பேர­ணி­யில் கலந்­து­கொண்­ட­வர்­களை விரட்டி விரட்­டித் தாக்­கி­னார்­கள். பர­மேஸ்­வரா வீதி கொஞ்ச நேரத்­தில் ஓய்ந்­து­போன போர்க்­க­ளம் போன்று காட்­சி­ய­ளித்­தது. இவை­யெல்­லாம் 2012ஆம் ஆண்­டில் நடந்­தவை.

ஆனா­லும் ஒவ்­வோர் ஆண்­டும் ஏதோ ஒரு­வி­தத்­தில் மாவீ­ரர் நாள் நினை­வேந்­த­லுக்­கான முட்­டி­மோ­தல்­கள் தொடர்ந்­து­கொண்டே இருந்­தன. வாய்ப்­புக் கிடைத்­த­போது 2015ஆம் ஆண்டு ஆட்­சியை மாற்றுவதற்குத் தமிழர்கள் முன்­னின்று உழைத்­தார்­கள். அதே­யாண்­டில் இல்­லை­யென்­றா­லும் அடுத்த ஆண்­டி­லேயே தமது அர­சி­யல் நகர்­வின் விளை­வைப் பரி­சோ­தித்­தார்­கள்.

களம் புதிய பரி­ணா­மத்தை, எழுச்­சியை, புதிய அர­சி­யல் செல்­நெறி நோக்­கிய பாதையை, மீண்­டும் ஒரு செய்­தியை வெளிப்­ப­டுத்தி நின்­றது.
பிச்­சல், பிடுங்­குப்­பா­டு­கள் எல்­லாம் தாண்டி, இன்று மாவீ­ரர் தினத்துக்குத் தடை வருமோ என்­கிற அச்­சம் தோன்­று­கை­யில், அவற்­றைத் தடுப்­ப­தற்­கான சட்­டச் சேட்­டை­கள் அரங்­கே­று­கை­யில், நேர்த்­தி­யான திசை நோக்கி உறு­தி­யோடு அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கி­றது இந்த ஆண்டு மாவீ­ரர் நாள்.

உல­கெங்­கும் பிள­வுண்டு கிடந்த ஈழத் தமி­ழர்­களை மீண்­டும் ஒரு தடவை ஒரு­கு­டை­யின் கீழ் ஒன்­றி­ணைத்­தி­ருக்­கி­றார்­கள் மாவீ­ரர்­கள். இந்த எழுச்சி புதிய அர­சி­யல் செல்­நெ­றி­யின் வழி தமி­ழர்­களை நடத்­திச் செல்­லும் என்று நம்­பு­வோம். அதே நேரத்­தில் நேற்­றைய நிகழ்வு எடுத்­தி­யம்­பி­யி­ருக்­கும் உறு­தி­யான செய்தி, லீ கூறி­ய­தைப் போன்று தமி­ழர்­கள் அடங்­கிப் போக­மாட்­டார்­கள்.

You might also like