தமி­ழரைப் போராட தூண்­டி­ய­து­போல் – முஸ்­லிம்­க­ளை­யும் தூண்­டக் கூடாது அரச தலை­வர் மைத்­திரி தெரி­விப்பு

விடு­த­லைப்­பு­லி­கள் என்ற பெய­ரில் தமி­ழர்­களை போராட்­டத்­துக்கு தள்­ளி­ய­தைப்­போல் இந்த நாட்­டு­டன் தொடர்­பில்­லாத ஒரு இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்­தைச் சுட்­டிக்­காட்டி ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளை­யும் பயங்­க­ர­வா­தத்துக்குள் தள்­ள­வேண்­டாம்.

நாட்­டுக்­குள் இருக்­கும் 150 பயங்­க­ர­வா­தி­க­ளோடு சேர்த்து அனைத்து முஸ்­லிம்­க­ளை­யும் பார்க்க வேண்­டாம்.

இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றில் நேற்று 21ஆம் திகதி நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து சுற்­று­லாத்­து­றைக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் குறித்த சபை ஒத்­தி­வைப்­பு­வேளை விவா­தம் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த வேளை­யில் சபைக்கு வந்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறப்­பு­ரையை நிகழ்த்­தி­னார். அதன்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­த­தா­வது-

கடந்த 21 ஆம் திகதி தாக்­கு­த­லின் போது அதி­க­மாக பேசப்­பட்ட விட­ய­மாக எனது வெளி­நாட்­டுப் பய­ணம் இருந்­தது. நான் சிங்­கப்­பூ­ரில் இருந்­த­போது எனக்கு இந்­தச் சம்­ப­வம் தெரி­ய­வந்­தது. இந்­தத் தாக்­கு­தல் எவ்­வாறு இடம்­பெற்­றது என்­பதை யோசித்­தேன். பன்­னாட்டு பயங்­க­வ­ராத அமைப்­பால் இது நடத்­தப்­பட்­டது என்று அப்­போது எனக்கு புரி­ய­வில்லை.

எமது பாது­காப்பு தரப்­பின் கடி­தம் ஒன்­றும் அப்­போது சமூக வலைத் தளங்­க­ளில் பர­வி­யது, அதனை நான் அவ­தா­னித்­தேன். அப்­போது எனக்கு புரிந்­தது, இந்த சம்­ப­வம் குறித்து பாது­காப்பு தரப்­புக்கு தெரிந்­துள்­ளது என்­பது. இதற்கு யார் கார­ணம் என்­பதை கண்­ட­றிய விசா­ரணை குழுவை உரு­வாக்க நினைத்­தேன். நான் நாட்­டுக்கு வர முன்­னர் விசா­ரணை ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுத்­து­விட்­டேன்.

அடுத்த நாள் காலை பாது­காப்பு குழு கூட்­டப்­பட்­டது. அதற்கு முன்­னர் விசா­ரணை ஆணைக்­குழு உறுப்­பி­னர்­களை நிய­மித்­தேன். பாது­காப்­புச் சபை­யில் இது­கு­றித்து பேசி­னேன். தலைமை அமைச்­சர் மற்­றும் பாது­காப்பு பிர­தா­னி­களை தொடர்பு கொண்டு அடுத்த கட்­டம் குறித்து பேசி­னேன். இனி­யொரு சம்­ப­வம் இடம்­பெ­றாது இருக்­க­வும் இதற்கு பொறுப்­பா­ன­வர்­கள் யார் என்­பதை கண்­ட­றிய சகல நட­வ­டிக்­கை­க­ளை­யும் நான் முன்­னெ­டுத்­துள்­ளேன்.

பாது­காப்பு அமைச்­சின் பிர­தான பத­வி­க­ளின் மாற்­றங்­களை செய்­து­ளேன். பாது­காப்­புப் படை­க­ளுக்­குச் சிறப்பு அதி­கா­ரங்­களை கொடுத்­துள்­ளேன். குற்­ற­வா­ளி­களை கைது­செய்­யும் சகல நட­வ­டிக்­கை­க­ளை­யும் முன்­னே­டுத்­துள்­ளேன். இன்று பாது­காப்பு சிறப்­பாக உள்­ளது. எனி­னும் விமர்­ச­னங்­கள் இன்­னும் உள்­ளன. ஆனால் இது குறித்து முழு­மை­யான அறி­வு­டன் அனை­வ­ரும் பேச வேண்­டும்.

இந்த பிரச்­சினை இலங்­கை­யின் பிரச்­சினை அல்ல, இது பன்­னாட்­டுப் பிரச்­சினை, இந்த பிரச்­சினை குறித்து பின்­னணி தெரி­யாது பலர் பேசு­கின்­ற­னர். கண்­மூ­டித் தன­மாக இந்த பிரச்­சினை குறித்­துப் பேசு­கின்­ற­னர். இது குறித்து அனை­வ­ரும் முத­லில் அறிந்­து­கொண்டு செயற்­பட வேண்­டும். ஊட­கங்­கள் இந்த விட­யத்­தில் பொறுப்­பாக செயற்­பட வேண்­டும்.

இது­வரை கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் 12 பேர் முக்­கி­ய­மான பயங்­க­ர­வா­தி­கள். கைப்­பற்­றப்­பட்ட ஆயு­தங்­க­ளில் குண்­டு­கள் தயா­ரிக்க பயன்­ப­டுத்­தும் பல பொருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது . இந்த பயங்­க­ர­வா­தி­க­ளு­டன் தொடர்­பு­டைய 41 வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளின் வீடு­கள், சொத்­துக்­கள் அனைத்­தும் அரச உடை­மை­யாக்­கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த தாக்­கு­த­லுக்கு சிறு உத­வி­களை செய்த நபர்­க­ளுக்கு பிர­தான பயங்­க­ர­வா­தி­க­ளால் ஒரு நப­ரி­டம் 20 இலட்­சம் ரூபா வழங்­கப்­பட்­டுள்­ளது. புல­னாய்­வு­து­றை­யால் இந்த விவ­ரங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. 15 வாக­னங்­கள், 4 மோட்­டார் சைக்­கிள் இந்த சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்டு கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

நாம் 30 வரு­டங்­கள் போரு­டன் வாழ்ந்த மக்­கள். குண்­டு­க­ளு­டன் வாழ்ந்­து­ளோம். இப்­போது இந்­தத் தாக்­கு­தல் தான் எமது முதல் தாக்­கு­தல் அல்ல. இந்த நாட்­டில் 6ஆவது அரச தலை­வர் நான். எனக்கு முன்­னர் இருந்த 5 அரச தலை­வர்­க­ளின் காலத்­தில் குண்­டு­கள் வெடித்­துள்­ளன. அதனை மறந்­து­விட வேண்­டாம். இந்த தாக்­கு­தல் இலங்­கை­யில் உரு­வாக்­கப்­பட்ட ஒன்­றல்ல. இந்த தாக்­கு­த­லில் இயக்­கு­நர் எங்­கி­ருந்தோ தாம்­தான் கார­ணம் என்­கி­றார். இது குறித்து நாம் கவ­ன­மாக சிந்­திக்க வேண்­டும். எம்மை விட பல­மான நாடு­க­ளுக்கு இது பெரும் நெருக்­க­டியை உரு­வாக்­கி­யுள்­ளது.

முஸ்­லிம் மக்­களை பார்த்­தால் சிங்­கள மக்­கள் அச்­சத்­தில் உள்­ள­னர். அதே­போல் முஸ்­லிம் மக்­க­ளும் அதே அச்­சத்­தில் உள்­ள­னர். இந்த தாக்­கம் தமிழ் மக்­க­ளை­யும் பாதித்­துள்­ளது என­பது அறிந்­து­கொள்ள முடி­கின்­றது. இந்­தத் தாக்­கு­த­லு­டன் தொடர்­பு­பட்ட 150க்கும் குறை­வான பயன்­க­ராத நபர்­கள் உள்­ள­தாக புல­னாய்வு அறிக்கை கூறு­கின்­றது. அவர்­க­ளுக்­காக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளை­யும் பயங்­க­ர­வா­தத்­துக்­குள் தள்­ளு­வதா என்­பதை யோசிக்க வேண்­டும்.

விடு­த­லைப்­பு­லி­கள் காலத்­தில் சகல தமி­ழ­ரும் புலி­கள் என்ற கருத்து உருப்­பெற்­றது. அத­னால் எமக்­குள் பிரிவு ஏற்­பட்­டது. 83 கல­வ­ரத்­தில் தமி­ழர்­க­ளின் சொத்­துக்­கள் நாச­மாக்­கப்­பட்­டதை அடுத்து தமிழ் இளை­ஞர்­கள் புலி­க­ளில் இணைந்­த­னர். நாம் தமி­ழர் மீதான அவ நம்­பிக்கை கொண்­ட­மையே 30 ஆண்­டு­கா­லப் போரை உரு­வாக்க கார­ண­மாக அமைந்­தது. இப்­போது நாம் பொறுப்­பு­டன் செயற்­பட வேண்­டும். விடு­த­லைப் புலி­கள் என தமி­ழர்­களை பார்த்­த­தைப்­போல் முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­தி­கள் என பார்க்க வேண்­டாம்.

பயங்­க­ர­வா­தம் என்­பது உல­கத்­தில் எங்கு எப்­போது உரு­வா­கும் என்­பதை எவ­ரா­லும் தெரி­விக்க முடி­யாது. உலக தலை­வர்­கள் எவ­ரா­லும் அதை எதிர்­பார்க்க முடி­யாது. எம்­மால் செய்ய முடிந்த அனைத்­தை­யும் நாம் செய்ய வேண்­டும். இப்­போது நாட்­டில் இன ஒற்­று­மையே வேண்­டும். சகல மக்­க­ளுன் இணைந்து செயற்­பட வேண்­டும். – என்­றார்.

You might also like