தமி­ழர்­க­ளின் விரோ­தி­யே கோத்­த­பா­ய!!

கோத்­த­பாய ராஜ­பக்ச தமிழ் மக்­க­ளால் விரோ­தி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றார் என்று, கிழக்கு மாகா­ண­சபை முன்­னாள் உறுப்­பி­ன­ரும் ரெலோ முக்­கி­யஸ்­த­ரு­மான கோவிந்­தன் கரு­ணா­க­ரம் தெரி­வித்­துள்­ளார்.

மட்­டக்­க­ளப்­பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிட்ட போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்த நாட்­டில் தமி­ழர்­கள் சிங்­கள தலை­வர்­களை நம்பி ஏமாந்த வர­லாறே காணப்­ப­டு­கின்­றது. இறு­தி­யாக 2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஒட்­டு­மொத்த சிறு­பான்­மை­யி­ன­மும் அரச தலை­வ­ராக்கி இன்று அவரை நம்பி ஏமாந்த நிலை­யில் இருக்­கின்­றோம்.

இன்­னு­மொரு தடவை சிங்­கள தலை­மை­களை நம்பி ஏமாற வேண்­டிய நிலை­யில் நாங்­க­ளும் இல்லை, தமிழ் மக்­க­ளும் இல்லை. அதற்­காக அரச தலை­வர் தேர்­தலை புறக்­க­ணிக்­கும் நிலை­யும் இல்லை.
2005ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­தலை புறக்­க­ணித்த கார­ணத்­தால் தமிழ் மக்­கள் என்ன கஷ்டங்­களை அனு­ப­வித்­தார்­கள் என்­பதை நாங்­கள் உண­ர­வேண்­டும்.

தமி­ழர்­கள் தங்­க­ளது வாக்­கு­களை இந்த நாட்­டில் அரச தலை­வ­ராக வரு­ப­வ­ருக்கு இனி­மேல் வழங்க வேண்­டு­மா­க­வி­ருந்­தால் அவ­ரி­ட­மி­ருந்து உறு­தி­யான உறு­தி­மொ­ழி­யொன்று வட­கி­ழக்கு தமிழ் மக்­கள் தொடர்­பாக உண்­மை­யான கரி­சனை கொண்­டுள்ள பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் இணக்­கத்­து­டன் ஒப்­பந்­தம் ஒன்று உரு­வாக்கி, அதன் மூலம் உறு­தி­மொழி வழங்­கப்­ப­டு­வ­தன் ஊடா­கவே ஒரு தலை­வரை நாங்­கள் ஆத­ரிக்­க­லாம்.

வேட்­பா­ளர்­கள் பகி­ரங்­க­மாக அறி­விக்­கப்­பட்டு அவர்­க­ளின் தேர்­தல் அறிக்­கை­க­ளும் வெளி­யி­டப்­ப­டும்­போது அதில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­டம் தொடர்­பான விட­யங்­களை கருத்­தில்­கொண்டு தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் வேண­வாக்­க­ளை­யும் முழுமை செய்­யக்­கூ­டிய ஒரு­வரை தெரி­வு­செய்ய வேண்­டும் என்­பதே எமது கட்­சி­யின் நிலைப்­பா­டாக இருக்­க­வேண்­டும் என நான் கரு­து­கின்­றேன்.

தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் கோத்தபாயவை தமிழ் மக்­க­ளின் விரோதி என்ற வகை­யி­லேயே பார்க்­கின்­ற­னர். முள்­ளி­ வாய்க்­கா­லில் ஒன்­றரை இலட்­சத்­துக்­கும் மேற்­பட்ட தமிழ் மக்­க­ளின் அழி­வுக்கு கார­ணம் அவர் என்­பதை இன்­னும் தமிழ் மக்­கள் மறக்­க­வில்லை -– என்­றார்.

You might also like