side Add

தமிழீழத்தவர்களிடம் இந்தியா பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்

ஒரு பத்­தி­ரி­கை­யா­ள­ராக ஈழத்­தில் நடந்த அவ­லங்­க­ளைத் தினம் தினம் பார்த்­தும், கேட்­டும் தவி­யாய்த் தவித்த முத்­துக்­கு­மார் தனது கோரிக்­கை­க­ளு­டன் இந்­திய மத்­திய அர­சின் அலு­வ­ல­கம் முன்­னால் தனக்­குத்­தானே தீ மூட்­டி­ய­தன் பின்­னர், தமி­ழ­கத்­தில் ஈழத் தமி­ழர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்­துப் பலர் தீக் கு­ளித்­தார்­கள். 2009ஆம் ஆண்டு ஜன­வரி தொடக்­கம் ஏப்­ரல் வரை­யான காலப்­ப­கு­தி­யில் தமி­ழ­கத்­தில் ஈழத்­த­மி­ழ­ருக்கு ஆத­ர­வா­கப் பதி­னைந்து பேர் தீக்கு­ளித்து மாண்டு போனார்­கள். முத்­துக்­கு­ மா­ரின் உருக்­க­மான கோரிக்­கை­க­ளும், ஆழ­மான சிந்­த­னை­க­ ளும் தமி­ழ­கத்­தில் மிகுந்த தாக்­கம் செலுத்­தின.

புலி­க­ளைத் தண்­டிக்­கும்
அரு­கதை எவ­ருக்­கும் கிடை­யாது
‘அபா­ரி­ஜின்­கள், மாயா, இன்கா இனங்­கள் அழிக்­கப்­பட்­டது போன்று, அந்த வரி­சை­யில் நாங்­க­ளும் சேர்க்­கப்­ப­டு­வது உங்­கள் நோக்­க­மென்­றால், எங்­கள் பழங்­க­தை­கள் ஒன்­றின்­படி ஒவ்­வொ­ரு­நா­ளும் ஏதே­னும் ஒரு வீட்­டி­லி­ருந்து ஒரு­வர் வந்து உங்­கள் முன்­னால் உயிரை மாய்த்­துக் கொள்­கி­றோம். எங்­கள் சகோ­த­ரி­க­ளை­யும், குழந்­தை­க­ளை ­யும் விட்­டு­விட்­டுச் செல்­லுங்­கள். தாங்க முடி­ய­வில்லை. அவர்­க­ளெல்­லாம் மன­மா­ரச் சிரிப்­பதை ஒரு­நாள் பார்ப்­போம் என்ற நம்­பிக்­கை­யில்­தான் நாங்­கள் போரா­டிக் கொண்­டி­ருப்­பதே. ஒரு பேச்­சுக்கு ஒத்­துக்­கொள்­வ­தென்­றா­லும்­கூட, விடு­த­லைப் புலி­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வர்­கள் என்­றா­லும் அப்­படி ஒரு தண்­ட­னையை வழங்­கும் யோக்­கி­யதை இந்­தி­யா­வுக்கோ, இலங்­கைக்கோ கிடை­யாது.’ என்று தனது இறு­திக் குறிப்­பில் முத்­துக்­கு­மார் குறிப்­பிட்­டி­ருந்­தமை இங்கு கூர்ந்து நோக்­கத்­தக்­கது.

முத்­துக்­கு­மார் முன்­வைத்த
கோரிக்­கை­கள்
முத்­துக்­கு­மார் தனது சாவுக்கு முன்­னர் பதி­னான்கு கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தி­ருந்­தார். இந்­தக் கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென்று மாண­வர்­கள்; போராட்­டங்­க­ளைத்; தீவி­ரப்­ப­டுத்­தி­னார்­கள். கலை­ஞ­ரின் அரசு போராட்­டங்­களை அணைப்­ப­தற்­கா­கப் பல திட்­டங்­க­ளைத் தீட்­டி­யி­ருந்­தது. முத்­துக்­கு­மா­ரின் கோரிக்­கை­க­ளில் முக்­கி­ய­மா­ன­வற்றை இங்கு பார்க்­க­லாம்,

• இந்­தியா உட­ன­டி­யா­கத் தமி­ழீ­ழத்­தின் பகு­தி­க­ளி­ லி­ருந்து தன்­னு­டைய துருப்­பு­க­ளைத் திரும்­பப் பெற்­றுக்­கொள்­வ­தோடு, மேற்­கொண்டு செயற்­கைக்­கோள் உத­வி­கள், ராடார் போன்ற உத­வி­க­ளைச் செய்­யக்­கூ­டா­தென்று பன்­னாட்­டுச் சமூ­கத்­தால் கண்­டிக்­கப்­பட வேண்­டும். இலங்­கை­யோடு இந்­தியா அரசு நடத்தும் முக்­கி­யத்­து­வ­மற்ற பேச்­சுப்­ப­ரி­மாற்­றங்­கள்­கூட பன்­னாட்­டுச் சமூ­கம் மூல­மா­கவே நடக்க வேண்­டும். தமி­ழக மக்­க­ளி­ட­மும், உல­கெங்­கும் பரந்து வாழும் தமி­ழீ­ழத்­த­வர்­க­ளி­ட­மும் இந்­தியா பகி­ரங்க மன்­னிப்பு கோர வேண்­டும்.

• இலங்கை அரசு எந்­தெந்த நாடு­க­ளி­ட­மெல்­லாம் கோரப்­பட்­டுப் புலி­கள் மீது தடை விதிக்­கப்­பட்­டதோ அந்­தந்த நாடு­க­ளில் புலி­கள் மீதான தடை நீக்­கப்­பட்டு, தடை செய்­யப்­பட்ட அமைப்­பின் உறுப்­பி­னர் என்ற குற்­றத்­துக்­கா­கச் சிறை­யி­ லி­ருக்­கும் அதன் உறுப்­பி­னர்­கள் எது­வித நிபந்­த­னை­யு­மற்று உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்­டும்.

• அமைக்­கப்­ப­டப்­போ­கிற தமி­ழீ­ழத்தை அங்­கீ­க­ரிக்­கின்ற உரி­மையை மட்­டும் பன்­னா­டு­கள் மேற்­கொள்­ள­லாமே தவிர, அது எவ­ரு­டைய தலை­மை­யில் அமை­ய­வேண்­டும் என்­ப­தைத் தமி­ழின மக்­கள் தான் முடி­வு­செய்­வார்­கள்.

• புலி­க­ளின் கை பல­வீ­ன­மான நேரத்­தில், மலை­யக மக்­கள் மீது நடந்து வந்த தாக்­கு­தல், எதிர்­கா­லத்­தில் அந்­தப் பகு­தி­க­ளில் மீண்­டும் ஒரு பெரிய இன அழிவு ஏற்­ப­டுத்­தப்­ப­டுமோ என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தால், மலை­யக மக்­கள் தமி­ழீ­ழத்­தோடு இணைய விரும்­பு­கி­றார்­களா என்­பதை வாக்­கெ­டுப்பு மூலம் அறிந்து அதன்­படி செயல்­ப­டு­தல் வேண்­டும். இந்த விட­யத்­தில் மலை­யக மக்­க­ளின் முடிவே இறு­தி­யா­னது.
மாண­வர் எழுச்­சி­யும் போராட்­ட­மும் தீவி­ரம் அடை­வ­தைக் கண்ட கலை­ஞர் தலை­மை­யி­லான தமி­ழக அரசு, உட­ன­டி­யா­கத் தமி­ழ­க­மெங்­கும் கல்­லூ­ரி­க­ளை­யும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளை­யும் மூடி­யது. மாண­வர்­களை விடு­தி­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­மாறு அறி­வித்­தது. கிட்­டத்­தட்­டப் பத்து நாள்­கள் கல்­விக்­கூ­டங்­கள் மூடப்­பட்­டன. இத­னால் மாண­வர் போராட்­டங்­கள் வலு­வி­ழந்­தன. இருப்­பி­னும் முத்­துக்­கு­ மார் மூட்­டிய தீ தமி­ழ­க­மெங்­கும் கொழுந்­து­விட்டு எரிந்­தது. இது தி.மு.க மற்­றும் அ.தி.மு.க கட்­சி­களை ஈழப்­போ­ராட்­டத்­துக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்­டுக்கு வலுக்­கட்­டா­ய­மாக இழுத்து வந்­தது என­லாம்.
(தொட­ரும்)

You might also like