தரப்­ப­டுத்­த­லில் விராட் கோக்லி முத­லி­டம்

பன்­னாட்டு கிரிக்­கெட் சபை டெஸ்ட் ஆட்­டங்­க­ளுக்­கான தனது தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லைப் புதுப்­பித்­துள்­ளது. இந்­திய அணி­யின் தலை­வர் விராட் கோக்லி துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்­கான தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டத்­தில் உள்­ளார்.

பங்­க­ளா­தேஷ் -– சிம்­பாப்வே அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் ஆட்­டம் நேற்­று­முன்­தி­னம் முடி­வுக்கு வந்­ததை அடுத்து இந்­தத் தரப்­ப­டுத்­தல் புதுப்­பிக்­கப்­பட்­டது. இந்­திய அணி­யின் தலை­வர் கோக்லி 935 புள்­ளி­க­ளு­டன் முத­லி­டத்­தில் தொடர்­கி­றார். சிமித் 919 புள்­ளி­க­ளு­டன் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளார்.

நியூ­சி­லாந்து அணி­யின் தலை­வர் வில்­லி­யம்­சன் 847 புள்­ளி­க­ளு­டன் மூன்­றா­வது இடத்­தி­லும், இங்­கி­லாந்­தின் அணித் தலை­வர் ரூட் 835 புள்­ளி­க­ளு­டன் நான்­கா­வது இடத்­தி­லும், ஆஸ்­தி­ரே­லிய வீரர் வோர்­ணர் 812 புள்­ளி­க­ளு­டன் ஐந்­தா­வது இடத்­தி­லும், உள்­ள­னர். ஆறு முதல் பத்து வரை­யி­லான இடங்­க­ளில் புஜாரா, கரு­ணா­ரத்ன, சந்­தி­மல், எல்­கர், கவாயா ஆகி­யோர் உள்­ள­னர்.

இதன்­படி தரப்­ப­டுத்­த­லில் முதல் பத்து இடங்­க­ளுக்­குள் உள்ள இலங்கை வீரர்­க­ளாக சந்­தி­மல், கரு­ணா­ரத்ன ஆகி­யோரே உள்­ள­னர். இவர்­களை விட குசல் மென்­டிஸ் 16 ஆவது இடத்­தி­லும், மத்­தி­யூஸ் 24ஆவது இடத்­தி­லும், டிக்­வெல்ல 39ஆவது இடத்­தி­லும், தனஞ்­சய டி சில்வா 48ஆவது இடத்­தி­லும், றோசன் சில்வா 70ஆவது இடத்­தி­லும், தரங்க 73ஆவது இடத்­தி­லும், குண­தி­லக 75ஆவது இடத்­தி­லும், கௌசால் சில்வா 80ஆவது இடத்­தி­லும், குசல் பெரேரா 89ஆவது இடத்­தி­லும், டில்­ரு­வான் பெரேரா 92ஆவது இடத்­தி­லும், அசல குண­ரத்ன 99ஆவது இடத்­தி­லும் உள்­ள­னர்.

You might also like