தரையிறங்கிய விமானம் விபத்து- 87 பயணிகள் அந்தரிப்பு!!

மியன்மார் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்ததைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கியது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானத்தின் முன்பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே விமானம் தரையிரங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது விமானத்தில் 7 பணியாளர்கள் உட்பட 89 பேர் பயனித்துள்ளனர். விபத்தில் எவருக்கும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

You might also like