தற்போதை அரசியல் மாற்றம்- மனோ கணேசனின் திடீர் அறிவிப்பு!!

0 945

மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசுடன் இணைவதற்கு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கட்சித்தாவல்கள் அதிகமாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மனோ – மைத்திரி
சந்திப்பு சற்று பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது கீச்சகப்  பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசில் இணைய முடியாது நேரடியாக கூறி விட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

You might also like