தலைமுடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர….!!
கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி காயவைத்தது (500 கிராம்), எலுமிச்சம் பழத்தோல் (100 கிராம்), கறிவேப்பிலை (300 கிராம்), கரிசலாங்கண்ணிக் கீரை (300 கிராம்) இவை நான்கையும் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து விழுதாக்கி தலைக்கு நன்றாக தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். இவ்வாறு வாரம் ஒருமுறை இதுபோல செய்தால் முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும்.