தல்­செ­வ­ன­வில் ஒரு­வர் கைது!

பொருள்­க­ளைத் திரு­டி­னார் என பொலி­ஸார் தெரி­விப்பு

‘‘காங்­கே­சன்­துறை தல்­செ­வன கடற்­க­ரைக்கு வரு­ப­வர்­க­ளின் உடை­மை­க­ளைத் திரு­டி­னார் என்ற குற்றச்சாட்டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்’’ என்று காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­த­னர்.

‘‘கடற்­க­ரைக்கு வந்து செல்­வோ­ரின் உந்­து­ரு­ளி­க­ளின் இருக்­கை­க­ளின் கீழ் உள்ள பெட்­ட­கத்தை போலிச் சாவி கொண்டு திறந்து உடை­மை­கள் கள­வா­டப்­ப­டு­வது தொடர்­பில் காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் தொடர்ச்­சி­யாக முறைப்­பா­டு­கள் பதி­வு­செய்­யப்­பட்டு வந்­தன. இந்த விட­யம் தொடர்­பில் பொலி­ஸார் கடற்­க­ரை­யில் தொடர்ச்­சி­யான கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வந்­த­னர். நேற்­று­முன்­தி­னம் மாலை வேளை கடற்­க­ரைக்கு வந்த ஒரு­வ­ரின் உந்­து­ரு­ளிப் பெட்­ட­கத்­தைத் திறந்து திருட முற்­பட்­ட­ ஒருவரைத்தாம் கைது செய்தனர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்­யப்­பட்­ட­வ­ருக்கு வயது 23. அவ­ரி­டம் இருந்து சாவிக்­கொத்து, 15 அலை­பேசி நினைவு அட்­டை­கள், சிம் அட்டைகள், பெண்­க­ளின் பணப்பை மற்­றும் அவர் பய­ணித்த முச்­சக்­கர வண்டி என்­பன மீட்­கப்­பட்­டன என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like